...
சிறப்புமலையகம்

மலையகத்திலும் தீபாவளி கொண்டாட்டங்கள்..

பா.திருஞானம்

மலையகத்தில் இம்முறை பாரிய சவால்களுக்கு மத்தியில் தீவாவளி கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கொரோனா வைரஸ் பரவல் மற்றும் விலையேற்ற திண்டாட்டங்களுக்கு மத்தியில் ஒரளவு நிம்மதியாக அனைத்தையும் சுருக்கி கொண்டு தீபாவளி கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது.

இருளில் இருந்து வெளிச்சத்திற்கு அதாவது சுபீட்சமான வாழ்க்கைக்கு முன் வந்த நன் நாளாக தீபாவளி இருந்த போதும் இம்முறை இது கேள்வி  குறியாகவே இருக்கின்றது.

இந் நிலையில்; இன்று (4) காலை மலையகத்தின் அனைத்து ஆலயங்களிலும் விஷேட பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெற்றது.

இந் தெய்வீக நிகழ்வில் தோட்ட மக்கள் கலந்துக் கொண்டனர். அதன் ஒரு கட்டடமாக புஸ்ஸல்லாவ சிவபுரத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ தாயுமானேஸ்வரர் சிவன் ஆலயத்தில் இன்று விஷேட பூஜைகள் நடைபெற்றன. இந் நிகழ்வில் பெரும்பாலான பக்தர்கள் கலந்துக் கொண்டார்கள்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen