...
அரசியல்செய்திகள்

மலையகத்திலுள்ள ஆலயங்கள் தெய்வ சிலைகள் உடைப்பிற்கு ஜீவன் தொண்டமான் கண்டனம்

மலையகத்தில் பல்வேறு இடங்களில் ஆலயங்கள் மற்றும்  தெய்வ உருவ சிலைகள் உடைக்கப்படுகின்றன. முதலாவதாக நாகசேனை பகுதியில் கிறிஸ்தவ தேவாலயத்தில் மாதா சிலை உடைக்கபட்டதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

அதன் பின்னர் விநாயகர் ஆலயத்தில் உண்டியல் உடைக்கபட்டு பல்வேறு பொருட்களும் சேதமாக்கப்பட்டுள்ளன.

அதனை தொடர்ந்து லிந்துலை பகுதியில் புத்தர் சிலை மற்றும் மாதா சிலை உடைக்கப்பட்டிருந்தது. நேற்று (02) காலை அக்கரபத்தனை நகரத்திற்கு அருகாமையில்  புதிதாக நிர்மாணிக்கபட்டிருந்த இந்து ஆலயத்தில் 10 இற்கும் மேற்பட்ட தெய்வ உருவச் சிலைகள் ஒரு சில விஷமிகளால் உடைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனைத்தொடர்ந்து அப்பிரதேசத்தில் நேற்று (02) காலை அமைதியின்மை ஏற்பட்டது. இவ்விடயம் தொடர்பாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டுச் சென்றதையடுத்து அமைச்சரின் பணிப்புரைக்கமைய முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினர் ஏ.பி சத்திவேல் சம்பவ இடத்திற்கு விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை ஆராய்ந்து, உடனடியாக நுவரெலியா மாவட்டத்திற்கு பொறுப்பான பொலிஸ் உயர் அதிகாரியின் கவனத்திற்கு கொண்டுச் சென்றுள்ளார்.

மேலும் மலையக பகுதிகளில் குறிப்பிட்ட சில விஷமிகள் இன, மதங்களுக்கு இடையில் முரண்பாட்டை உருவாக்க முனைகின்றனர்.

எனவே இவ்விடயங்கள் தொடர்பாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நாட்டின் ஜானதிபதி, பிரதமர் ஆகியோரின்  கவனத்திற்கு கொண்டுச்சென்று எதிர்காலத்தில் இவ்வாறான பிரச்சனைகள் இடம்பெறமால் இருக்க நடவடிக்கை  எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen