செய்திகள்

மலையகத்தில் அதிகரிக்கும் தொற்றாளர்கள் – இராதா கூறியுள்ள முக்கிய விடயம்.

(ராகவ்)

மலையகத்தில் கொரோனா உப கொத்தணிகள் உருவாகக்கூடிய அபாயம் காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் அச்சம் வெளியிட்டுள்ளார்.

நுவரெலியாவில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை கூறினார்.

நுவரெலியா மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன் , தொற்றாளர்களை பராமரிப்பதற்காக உரிய கட்டில் வசதிகள் இல்லையென பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.

எனவே பதிவாகும் நோயாளர்களை வெளி மாவட்டங்களுக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல வேண்டிய நிலைமையே அதிகம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் தடுப்பூசியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com