மலையகம்

மலையகத்தில் ஆர்வம் குறைந்து வரும் ஆரோக்கியமான விளையாட்டு

 

மலையக சமூகத்தின்  ஒற்றுமையும், ஒழுக்கத்தையும் ஆரோக்கியத்தையும்  வழிநடத்தலையும் இந்த இடம் பல தோட்டப்புறங்களில் செய்திருக்கின்றது.வயதில் பெரியவர்கள் சிறியவர்களை  ஆற்றுப்படுத்துகின்ற இடமாக இந்த இடங்கள் இருந்திருக்கின்றன.  எப்பவுமே சுறுசுறுப்பான  ஒரு இளைஞர்  பட்டாளத்தை  ஓவ்வொரு  காலப்பகுதியிலும் இது உருவாக்கி இருக்கின்றது , தோட்டத்தில் நடக்கின்ற திருவிழா போன்ற முக்கியமான பொது நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளில்  தோட்ட  தொழிலாளர்  அல்லாத ஏனைய இளைஞர்கள்,பாடசாலை மாணவர்கள் அவற்றில் ஈடுபட ஒழுங்கமைப்புகளுக்கான பேச்சுக்கள் கூட இந்த இடத்தில்  தான் இடம்பெற்றுகின்றன.  அதன் காரணமாகத்தான் முன்பு தோட்டப்புற திருவிழாக்கள் மண் வாசனையோடு,பயப்பக்தியோடும்   நிறைந்த  பொதுமக்கள் மத்தியில் இடம்பெற்றுகின்றன.
அரசியல் தலைகள்  பருவ மழை பெய்வது போல  தேர்தல்  காலத்துல்  மக்கள் இருப்பு   பக்கம் வரும் பொழுது  இளைஞர்கள்  இணைந்து  கேக்குற விசயமா எங்களுக்கு இதை செய்து தாங்க  (வெட்டி த்தாங்க) என்ற ஏக்கமான  கோரிக்கை உணர்த்தும் அவர்கள்   அப்படி அதை   மதித்திருக்கின்ன்றார்கள் என்று  .அதே நேரம் தோட்ட  நிர்வாகமும், சில கட்சி காரியாலயங்களும் இதற்க்கான  உபகரணங்களை  வருடத்துக்கு ஒரு முறையேனும்  வழங்கி வந்திருக்கின்றன ,இப்போதும்  அப்படி வழங்கப்படுவதாக  இருந்தாலும் அது தோட்ட  தலைவரின் பிள்ளைகள்  வீட்டில் விளையாட அல்லது விளையாட்டு கடைக்கு அந்தி  நேர குடிக்காக விற்பனை  செய்யப்டுகின்ற சூழலாக இப்போது  மாறிவிட்டதாக தெரிகிறது. மேலே நான்  விபரித்தது எல்லாமே மலையகத்தில்  காணாமல்  போன கலகலப்பான  கரப்பந்தாட்ட விளையாட்டைத்தான்.
இன்றைய  காலகட்டத்தில் எப்படி சமூக இணையத்தளங்களில் ஒவ்வரு ஊரிலும் ஒருத்தர், இருவர் பிரபல்யமோ அதே போல ஒரு காலத்தில் பல மைல்களுக்கும் அப்பால் பிரபல்யமாக பேசப்பட்ட சிறந்த கரப்பந்தாட்ட வீரர்கள் மலையகத்தில்  இருந்திருக்கின்றர்கள் .அதே போல  கரப்பந்தாட்டம் காரணமாகவே சில தோட்டங்கள் பிரபலயமாகவும் இருந்திருக்கின்றன. காலப்போக்கில் அதாவது இப்பொழுது அந்த நிலைமை  அப்படி இல்லை  என்றே நினைக்கின்றேன்.
இப்படி எல்லாம் இருந்த இந்த  கரப்பந்தாட்ட விளையாட்டு  எங்கே  போனது  ஏன் படி படிப்படியாக கரப்பந்தாட்ட மைதானங்கள் மனிதனற்ற மாயாணங்களாக  மாறின என்ற  இந்த கேள்விகளுக்கு பல்வகையுலும் பதில்கள்  இருக்கின்றன. ஆனாலும்  என்னுடைய பார்வையில் சில விடையங்களை பின்வருமாறு குறிப்பிடுவேன்.  ஒன்று முன்பு  தோட்டப்புறங்களில் ஒரு தொழிற்சங்கம்  மாத்திரம் ஓங்கி நின்றது இது பெரும்பாலும் கட்சி பேதங்களை  பெரிதாக வெளிப்படுத்தியது இல்லை ,காலப்போக்கில் 02 அல்லது 03 தொழிற்சங்கங்கள்  உருவாக ஆரம்பித்த காலம் (அரசிலியல் இது ஆரோக்கியம் ) கொஞ்சம் கொஞ்சமாக இளைஞர்களுக்கிடையில் அவன் இந்த  கட்சி அவனுடைய ஆல்  அவர்களுக்குத்தான் விளையாட்டு  உபகரணங்களை வழங்கியிருக்கின்றார்கள். இப்படிதான் இவர்களுடைய முதலாவது  ஒற்றுமை  கரப்பந்தாட்ட  மைதானத்தில் இருந்து இல்லாமல் போனது.இரண்டாவது   இளைஞர்களுக்கு கிரிக்கட் மீதான  ஆர்வம் அது  இன்னுமே டீ 20 போட்டிகள்  வந்த பிறகு  அதிகரிக்க ஆரம்பித்தன,அதே நேரம் வழமையாக தோட்ட நிர்வாகமும் ,கட்சி தலைமைகளும் வழங்கும் விளையாட்டு உபகரணங்கள் மைதானத்துக்கு தற்போது வந்ததாக யாரும் கண்டதாகவும்  இல்லை,அவற்றை செலவு செய்து  வாங்கி விளையாடும் அளவுக்கு பொறுப்பு  மிக்க  கழகங்கள்/விளையாட்டு  அமைப்புகளுக்கும்  இல்லை என்றே நினைக்கின்றேன்.
என்னுடய உயர்தர காலத்தில் 2004/2005 மைதானங்கள் இளைஞர்களால்  நிரம்பி வழியும் அதுவும் தீபாவளி ,சித்திரை புத்தாண்டு என்றால் இன்னுமே அதிகம் எனினும் அண்மைக்காலமாக நான்  அவதானித்தது ஒரு சில தோட்ட புறங்களில் கரப்பந்தாட்ட  வலை என்பன கட்டப்பட்டிருந்தாலும் யாரும்   விளையாடி கண்டது மிகவும் குறைவான சந்தர்பங்களாகவே இருந்திக்கின்றன.அப்டியே விளையாடுகின்ற மைதானங்களில்  முன்பு போல 35,40 வயதை கடந்தவர்கள் விளையாடுவது இல்லவே இல்லை  என்றே குறிப்பிடுவேன்.அதுவும்  சிலர் மரக்கறி விவசாயம் போன்றவற்றில் மாலை நேரத்தை செலவளிக்கின்றனர்,இன்னும் சிலர் தென்னிந்திய தொலைக்காட்சி மோகத்தில் இருந்துவிடுகின்றனர்.ஆக  இளைஞர்கள் விளையாடுவார்கள் ஆனால் அது ஒரு சாதாரண விளையாட்டாகவே மாத்திரம் இருக்கும்  நான் மேலே சொன்னது  போல ஒரு நல்  வழி நடத்தல் இல்லாத சாதாரண பொழுது  போக்கான நேர்த்தியற்ற விளையாட்டாக முடிவுக்கு வரும் .அதே நேரம் பல கரப்பந்தாட்ட மைதானங்கள்  விஸ்தரிக்கப்பட்டு  இப்பொழுது  கிரிக்கெட் மைதானங்களாக உருப்பெற்று
 உறுப்படியற்று காணப்படுவது வேதனைக்குரியது. எனவே ஒரு சமூக மாற்றத்தில் விளையாட்டு வினையாக இருந்திருக்கின்றது.
ஆர்.ஜே .தனா

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button