நுவரெலியாமலையகம்விளையாட்டு

மலையகத்தில் இடம்பெற்ற NPL 2021கிரிக்கட்போட்டி மலையகம் சார் கிரிக்கட் வீரர்களுக்கு ஆரோக்கியமான ஆரம்பம் …

NPL 2021கிரிக்கட் போட்டிகள் முடிவிற்கு வந்துவிட்டது. மலையகத்தை குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் இந்த போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றமையானது எதிர்காலத்தில் மிக முக்கிய நல்ல மாற்றங்களை ஏற்படுத்த கூடிய வாய்ப்பு இருக்கின்றது.

குறிப்பாக இம்முறை இடம்பெற்ற போட்டிகளிலும் பிரத்தியேகமாக 23 வயதுக்குற்பட்ட 25 வீரர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள் எதிர்காலத்தில் நுவரெலியா மாவட்ட சிறந்த அணி ஒன்றை கட்டமைப்பதற்கு இதில்அதிகமாக பாடசாலை மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்ட போதிலும் தமிழ் பாடசாலை மாணவர்களின் தொகை ஒப்பட்டளவில் மிக குறைவாக இருக்கின்றது. எனவே எதிர்காலத்தில் தமிழ் பாடசாலைகள் குறிப்பாக கடின பந்து கிரிக்கட் அணிகள் காணப்படுகின்ற பாடசாலைகள் இந்த சுற்று போட்டி தொடர்பாக சற்று கவனம் செலுத்தினால் நல்லது.

முதல் தடவை இந்த சுற்றுப்போட்டி இடம்பெற்றமையினால் முழுமையான அடைவுமட்டத்தை எதிர்பார்ப்பது முட்டாள் தனமானது. இந்த ஆரம்பம் இனி வரும் காலங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்றால் நுவரெலியா மாவட்டத்தில் இருந்து தேசிய அணியை நோக்கி வீரர்கள் செல்வது உறுதி.
இந்த போட்டி முதல் தடவை சிறப்பாக இடம்பெற REHA STEEL நிறுவனம் மிக முக்கிய பங்கு வகித்திருக்கிறது. மலையக சமூகம் சார்ந்து வாழ்த்துகளையும் நன்றிகளையும் கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.

இதே கிரிக்கட் போட்டி போன்று உதைப்பந்தாட்டம், கரப்பந்தாட்ட போட்டிகளை நடத்தினால் எல்லா விளையாட்டு துறையிலும் எம்மவர்கள் திறமையை வெளிக்கொணர முடியும் என்பதில் ஐயமில்லை.

நுவரெலியா மாவட்ட கிரிக்கட் சம்மேளத்தினால் நடாத்தப்பட்ட NPL 2021 போட்டிக்கு மலையகம்.lk ஊடக அனுசரனையை வழங்கி இந்த போட்டியை எல்லோர் மத்தியிலும் பேசுப்பொருளாக மாற்றியது என்பது குறப்பிடத்தக்கது. இனிவரும் காலங்களில் உங்கள் பிரதேசத்தில் இடம்பெறும் இப்படியான விளையாட்டு போட்டிகளுக்கு அனுசரனை வழங்கி எம்மவர்களின் திறமைகளை உலகரிய செய்ய மலையகம்.lk தயாராகவே
இருக்கின்றது.
R.வினோத்

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com