மலையகத்தில் கடும் மழை, நோட்டன் பகுதியில் பலர் இடம்பெயர்வு

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்
காற்றுடன்கூடிய அடை மழையினால் நோட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒஸ்போன் கிளவட்டன் தோட்ட 13 குடியிருப்புகள் பாதிப்படைந்து 24 பேர் பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்
16.08.2018 பெய்து கடும் மழையுடன் கூடிய காற்றினால் 10 வீடுகள் பகுதியளவில் சேதமாகியதுடன் மூன்று வீடுகள் பாரியளவில் சேதமாகியுள்ளது.
பாதிப்படைந்த மூன்று குடும்பங்களை சேர்ந்த 24 பேர் கிளவட்டன் வித்தியாலயத்தில் தற்காளிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பாதிப்படைந்த குடும்பங்களுக்கு தோட்ட நிர்வாகம் மதிய உணவு வழங்கியதுடன் பிரதேச கிராம சேவகர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் மு.இராமச்சந்திரன் ஆகியோர் பாதிப்பவர்களை பார்வையிட்டதுடன் கிளவட்டன் வித்தியாலயத்தில் தற்காளிகமான தங்க வைக்கப்பட்டு அம்பகமுவ பிரதேச செயலகத்தினூடாக உலருர்ணவு பொருட்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 6 சிறுவர்கள் 10 ஆண்கள் 8 பெண்களுமாக 24 நான்கு பேர் தற்காளிகமாக இடம்பெயர்ந்துள்ளனர்.