மலையகம்

மலையகத்தில் தொடரும் போராட்டம் : அடிப்படை வேதனம் 1000 ரூபாவாக அதிகரிக்கப்படுமா?

அடிப்படை வேதனம் 1000 ரூபா வழங்கப்பட வேண்டும் என கோரி ஹட்டன் தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், செனன் தோட்ட மக்கள் மற்றும் எட்டியந்தோட்ட நகரிலும் பெருந்தோட்ட தொழிலாளர்கள், மஸ்கெலியா – சாமிமலை பிரதேசத்திற்கு உட்பட்ட ஃபேர்லோன் பிரிவில் தொழிலாளர்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

கூட்டு ஒப்பந்தம் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதிய கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிடும் தொழிங்சங்கங்கள் இந்த முறை தோட்ட தொழிலாளர்களின் வேதன விடயத்தில் ஏமாற்ற முடியாது எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, வேதன அதிகரிப்பை கோரி போராட்டம் நடத்திய தொழிலாளர்களுக்கு, தோட்ட நிர்வாகம் வேலை வழங்க மறுத்த சம்பவம் ஒன்று இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

அத்துடன், முதலாளிமார் சம்மேளத்திற்திற்கும், கூட்டு ஒப்பந்த தொழில் சங்கங்களுக்கும் இடையிலான 3 ஆம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைப்பெறவுள்ளது.

இதன்போது தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை வேதனமாக 962 ரூபா வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button