மலையகத்தில் பல்வேறு இடங்களில் கவனயீர்ப்பு போராட்டம்
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தங்களது வேதன அதிகரிப்பை வலியுறுத்தி பல்வேறு இடங்களில் கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
இந்த நிலையில், பத்தனை – திம்புள்ள தோட்டத்தில் தோட்டத் தொழிலாளர்கள் தலவாக்கலை – நாவலப்பிட்டி பிரதான வீதியில் திம்புள்ள சந்தியிலும், நோர்வுட் – வென்ச்சர் – சின்ன எல்படை கீழ்பிரிவு மக்கள், ஹட்டன்- பொகவந்தலாவை பிரதான வீதிக்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் குறித்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
முதலாளிமார் சம்மேளனத்துக்கும், கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இன்றைய பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, தேனீரை பருகும் போதேனும் தங்களின் நிலைமைகளை நினைத்துப் பார்க்குமாறு, தேயிலைத் தொழிற்துறை பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், இந்த போராட்டத்தில் சுமார் 300 பேர் கலந்து கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பிடுகின்றது.