செய்திகள்மலையகம்

மலையகத்தில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு

மலையகத்தில் உள்ள பல பிரதான நகரங்களில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கேஸ் விற்பனை நிலையகள் பூட்டப்பட்டுள்ளதுடன் பல எண்ணெய் நிரப்பு நிலையங்களில் மண்ணெண்ணை தட்டுப்பாடும் நிலவி வருகிறது.

கேஸ் மற்றும் மண்ணெண்ணை தட்டுப்பாடு காரணமாக பொது மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

ஹட்டன், கொட்டகலை, தலவாக்கலை உள்ளிட்ட பிரதான நகரங்களில் கேஸ் (எரிவாயு ) இல்லாததன் காரணமாக எரிவா|யு விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

எரிவாயு இல்லாததன் காரணமாக பல குடும்பங்கள் மண்ணெண்ணை அடுப்புக்கு மாறிய போதிலும் தற்போது மண்ணெண்ணைக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது.

புத்தாண்டினை கொண்டாடுவதற்காக இன்று (31) காலை மண்ணெண்ணை பெற்றுக்கொள்வதற்காக பலர் எண்ணை நிரப்பு நிலையங்களுக்கு வருகை தந்த போதிலும் மண்ணெண்ணை இல்லாததன் காரணமாக ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இதேவேளை, ஒரு சில எண்ணை நிரப்பு நிலையங்களில் மாத்திரம் மண்ணெண்ணை பெற்றுக்கொடுக்கப்பட்டதன் காரணமாக பெரும்

எண்ணைக்கையிலானவர்கள் மண்ணெண்ணை பெற்றுக்கொள்வதற்காக வருகை தந்திருந்தனர்.

குறித்த எண்ணை நிரப்பு நிலையங்களில் அதிக பட்சம் 5 லீற்றர் மாத்திரமே பெற்றுக்கொடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஒரு சில பகுதிகளில் கேஸ் பெற்றுக்கொள்ள முடியாததன் காணரமாக வெற்று சிலிண்டர்களை மாற்று உபயோகத்திற்காக பயன்படுத்தப்பட்டிருந்தமையும் காணக்கூடியதாக இருந்தன.

கேஸ் வர்த்தக நிலையங்களில் கடந்த காலங்களில் கேஸ் சிலிண்டர்கள் பெற்றுக்கொடுக்கப்பட்ட போதிலும் 30 அல்லது 40 சிலிண்டர்கள் மாத்திரமே பெற்றுக்கொடுக்கப்பட்டதாகவும் அது தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு போதுமானதாக இல்லை என்றும் இதனால் பல வாடிக்கையாளர்கள் முறண்பட்டு செல்வதாகவும் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எது எவ்வாறான பொதிலும் நாளை பிறக்கவுள்ள புத்தாண்டுக்காக மக்கள் ஆயத்தமாகி வரும் நிலையில் மண்ணெண்ணை மற்றும் கேஸ் ஆகியவற்றை பெற்றுக்கொள்வதற்காக அலைந்து திரிய வேண்டியுள்ளமை கவலைக்குரியது என பலரும் தெரிவித்தனர்.

-மலையக நிருபர் சுந்தரலிங்கம்-

Related Articles

Back to top button