மலையகம்

மலையகத்துக்கான போக்குவரத்து ஸ்தம்பிதம்! கொட்டகலையில் ரயில் தடம்புரண்டது.

நாவலப்பிட்டியிலிருந்து நானுஓயா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சரக்கு தொடரூந்து எண்ணெய்க் கொள்கலனொன்று  இன்று மாலை 5.45 மணியளவில் தடம் புரண்டுள்ளதனால் மலையக தொடரூந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி தொடரூந்து கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்

கொட்டகலை தொடரூந்து நிலையத்திற்கு அருகாமையில் தொடரூந்தின் சரக்கு பெட்டி பகுதியே தடம் புரண்டுள்ளது.

26630 லீற்றர் எண்ணெய்க் கொள்கலன் ஒன்றை கொட்டகலை எரிபொருள் டிபோவில் நிறுத்துவதற்கு முற்பட்ட சந்தரப்பத்திலேயே இவ்வாறு தடம் புரண்டுள்ளது.

தொடரூந்து பாதையை சீரமைத்து வருவதாகவும் எனினும் இரவு நேரத்திற்குள் சீரமைத்து மலையக தொடரூந்து சேவையை வழமைக்கு திருப்பலாம் என நாவலப்பிட்டி தொடரூந்து கட்டுப்பாட்டு நிலையம் மேலும் தெரிவிக்கின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button