காலநிலைமலையகம்

மலையகம் உள்ளிட்ட சில பகுதிகளுக்கு நாளை பலத்த மழை.

மேல், சப்ரகமுவ, தென், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டத்திலும் நாளை முதல் மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

குறித்த பகுதிகளில் 75 முதல் 100 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் நாளை பிற்பகல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

இடிமின்னல் தாக்கங்களில் இருந்து பாதுகாப்பு பெற பொதுமக்களை முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது

Related Articles

Back to top button
image download