செய்திகள்

மலையகம் செய்திப் பிரிவிற்கு கிடைத்த மற்றுமோர் வெற்றி!

கடந்த ஜீலை மாதம் 16 ஆம் திகதி மத்திய மாகாண மின்சார சபை மத்திய நிலையத்தில் தமிழ் மொழி புறக்கனிப்பு தொடர்பான செய்தியொன்றினை பிரசுரித்திருந்தோம்.

தற்போது அந்த பிரச்சினை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அப் பிரதேசத்தில் வசிக்கும் அருள் என்பவர் எமது செய்திப் பிரிவிற்கு நன்றி கலந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் அப்பிரதேசத்தில் ஏற்ட்ட மின்சாரத் தடை காரணமாக அவர், முறையிடும் நோக்கில் மத்திய மின்சார சபையினை தொடர்பு கொண்டுள்ளார். அங்கு தமிழ் மொழி மூலம் பேசுவதற்கு பிரத்தியேக நபர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தது.

எனவே குறித்த விடயம் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார் .

பழைய செய்தியை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்.link

Related Articles

Back to top button