மலையகம்

மலையக அரசியல் வரலாற்றில் மிக முக்கிய திருப்புமுனை பிரதேச சபைகள் அதிகரிப்பு

நுவரெலிய மாவட்டத்திற்கு 4 புதிய பிரதேச சபைகளை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்க பட்டது என் அமைசர் மனோ கணேசன் தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்த நேரத்திலிருந்து மலையகத்தில் பல இடங்களிலும் மகிழ்ச்சி கொண்டாட்டங்கள் இடம்பெற ஆரம்பித்துள்ளன ,200 வருட கால மலையக மக்கள் பல வகைகளிலும் அரசியல் அனாதைகளாகவே இருந்துவந்துள்ளனர் என்பது அனைவருக்கும் தெரியும். குறிப்பாக பிரதேச சபைகள் தொடர்பான அழுத்தங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து அது பேசும் பொருளாக இருந்த நிலையில் தமிழ் முற்போக்கு கூட்டணி அது சம்பந்தமாக தொடர்ந்து அரசோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வெற்றி கண்டிருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்து மலையகத்தில் பல இடங்களிலும் பாற்சோறு வழங்கி மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டுள்ளது .

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button