மலையகம்

மலையக ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உதவ முன்வரவேண்டும்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வேண்டி தொடர்ந்து நடைபெற்று வரும் வேலை நிறுத்த போராட்டத்தினால் மலையகம் ஸ்தம்பிதம் அடைந்துள்ள அதே நேரம் ஒரு சிலர் தொழிலுக்கும் குறிப்பிட்ட சிலர் வேலை நிறுத்திலும் ஈடுபட்டுள்ளனர். இருந்தும் இதற்காண உரியதீர்வு இதுவரை கிடைக்கவில்லை

இந் நிலையில் இன்று (11.12.2018) புஸ்ஸல்லாவையில் எழுச்சிமிகு இளைஞர் அணியின் நிர்வாகத்தினர் ஊடக சந்திப்பு ஒன்றிளன மேற்க் கொண்டு இருந்தனர். இந்த அணியில் மலையத்தின் ஆசிரியர்கள் உட்பட இளைஞர்கள் இணைந்திருப்பது குறிப்பிடதக்கது.

இதன் போது இவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

மலைய பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் கேட்பது நியாளமான ஒன்றுதான் இதனை நாங்கள் வரவேற்கின்றோம். இதற்கு எங்களது பூரண ஒத்துழைப்பு இருக்கின்றது. ஆனால் தற்போது இதனை பெற்றுக் கொடுப்பதற்கு கம்பனியும் தொழிற்சங்ககளும் அரசாங்கமும் முன்னெடுத்து வரும் நடவடிக்கைள் சாதகமானதாக இல்லை. மலையக தொழிற் சங்கங்கள் தொழிலாளர்களுக்கு சம்பளம் பெற்றுக் கொடுக்க பேசுகின்றதா அல்லது தங்கள் தொழிற் சங்கங்களை வளர்ப்பதற்கு இதனை பயன்படுத்துகின்றதா என்ற கேள்வியும் எழும்பி உள்ளது. மலையகத்தின் தொழிற்சங்கங்கள் நானா நீயா என்ற ரீதியில் அறிக்கைகளை விட்டு வருகின்றன. எது எவ்வாறாயினும் தொழிலாளர்களிடம் இருந்து அனைவருமே சந்தா பெற்று வருகின்றனர். அதனால் அனைவருக்கும் தொழிலாளர்களின் சம்பளத்தை பெற்றுக் கொடுக்க வேண்டிய கடப்பாடு உள்ளது. இந்த பிரச்சனைக்கு உடனடியாக தீர்வினை பெற்றுக் கொடுக்கவும் வேண்டும்.

நாங்கள் ஆசிரியர்கள் என்ற ரீதியில் மலைய ஆசிரியர்களிடம் ஒரு கோரிக்கையை முன் வைக்கின்றோம். நீங்கள் ஜனவரி மாதம் பாடசாலைக்கு செல்லும் போது வெருங்கையுடன் செல்லாதிர்கள். உங்கனால் முடிந்த ஒரு தொகை கொப்பி புத்தகங்களுடன் செல்லுங்கள். தோட்ட தொழிலாளர்களுக்கு வேலை நிருத்தங்கள் காரணமாக தங்கள் பிள்ளைகளுக்கு தேவையான கற்றல் உபகரணங்களை கொள்வனவு செய்வதில் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கி உள்ளனர். இதை மலையத்தில் உள்ள பத்து ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் முன்னெடுக்கப்படும் சந்தர்பத்தில் பெருந்தொகையான மாணவர்களுக்கு உதவி செய்ய கூடியதாக இருக்கும். இதை ஒவ்வொறு ஆசிரியரும் கட்டாயம் செய்ய வேண்டும். பெருந்தோட்ட மக்களை பொருத்த வரையில் பாரிய சேமிப்புகளை கொண்டவர்களாக இல்லை. போராட்டத்திற்கு ஆயுத்தமானவர்களும் அல்ல. திடீர் என்று போராட்டம் என்றதும் ஒன்றும் செய்துக் கொள்ள முடியாதவர்களாக இருக்கிறனர். அரசாங்க தோட்டங்களே கம்பனிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. கம்பனிகளுக்கு தோட்டத்தை நடாத்த முடியாது நட்டம் என்றால் மீண்டும் அரசாங்கத்திடம் கொடுத்துவிட்டு செல்லாம் அல்வா. அதை அவர்கள் செய்ய மாட்டார்கள் இலாபம் அதிகம் இருக்கு அல்லவா.

இந் நிலை தொடருமானால் மலையத்தில் பாரிய அபிவிருத்தி பின்னடைவு ஏற்படகின்ற அதே நேரம் கல்வியில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் மலையத்தின் கல்வி பின்னடைவுக்கு தொழிலாளர்கனின் சம்பளம் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது¸ தற்போது மலையத்தில் கல்வி பொது சதாரணதரம் உயர்தர மாணவர்களுக்கும் பல்கலைகழகத்திற்கு சென்றுள்ள மாணவர்களக்கும் ஆசிரியர் பயிற்சி கலாசாலைகளில் உள்ள ஆசிரியர் பயிலுனர்களக்கும் கல்வியல் கல்லூரிகளில் கல்வி பயிலும் ஆசிரியர் மாணவர்களுக்கும் பெருந்தோட்ட தொழிலானர்கள் மாதாந்தம் தங்கள் சம்பளத்தின் பெருந்தொகையை செவவு செய்கின்றனர். இந் நிலையில் இவர்களுக்கு சம்பளமும் அதிகரிக்கபடவில்லை வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந் நிலையில் மலையத்தின் கல்வி நிலை எதிர்காலத்தில் பாதிப்படையும் இதை உணர்ந்து அணைவரும் செயற்பட வேண்டும் என கூறினர்.

பாலகிருஷ்ணன் திருஞானம்

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published.

Back to top button