கட்டுரைசிறப்புசெய்திகள்மலையகம்

மலையக இளம் பெண் எழுத்தாளர் நிவேதாவின் மூன்று நூல்கள் இணைய வழியூடாக அறிமுகம்.

மலையகத்தின் மற்றுமொரு இளம் பெண் எழுத்தாளர் நிவேதாவின் மூன்று நூல்கள் இணைய வழியூடாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு கடந்த 30/12/20 அன்று அகில இலங்கை ஐயப்பதாச சாம்பசிவ சிவாச்சாரியார் தலைமையில் இணைய வழியாக இடம் பெற்றது.

செல்வி அஷ்வினியின் இறை வணக்கத்தோடு ஆரம்பமான குறித்த நிகழ்வில், யாழ். பல்கலைக்கழக மாணவி செல்வி சுபானியின் வரவேற்புரையைத் தொடர்ந்து, தலைமையுரையினை ஸ்ரீ ஐயப்பதாச சாம்பசிவ சிவாச்சாரியார் வழங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து நூல்களின் ஆய்வுரைகளை பேராசான் சசாங்கன் சர்மா, டீ.எஸ்.கோகுலன், செல்வி.முபஸ்ஸிரா ஆகியோர் வழங்க; நூல்களுக்கான வாழ்த்துரைகளை ஓய்வுபெற்ற சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி. ராணி சீதரன், ஆசிரியை செல்வி. சாந்திரகுமாரி கனககரட்ணம் வழங்கினர்.

நன்றியுரையை நூலாசிரியர் செல்வி நிவேதா ஜெகநாதன் வழங்கினார்.

இவர் தனியார் தொலைக்காட்சி அலைவரிசையொன்றின் ஊடகவியலாளரும் செய்தி வாசிப்பாளரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button