செய்திகள்

மலையக இளைஞர்களே அவதானம் ! போலீஸ் எனக்கூறி பணம் பறிக்கும் கும்பல் மீண்டும் தலைநகரில்

மீண்டும் புலனாய்வு போலீஸ் என அடையாளப்படுத்துக்கொள்ளும் நபர்கள் பணம் பறிக்கும் நூதன திருட்டை மீண்டும் ஆரம்பித்துள்ளனர்.யுத்த காலப்பகுதியில் கொழும்பு போன்ற தலைநகரகங்களில் தமிழ் பேசுகின்றவர்களிடம் இவ்வாரான முறையில் கைபேசிகள் ,பணம் பறிக்கும் சம்பங்கள் அதிகமாகவே இருந்தன.

கடந்த இருவாரங்களுக்குள் களனி பகுதியில் தமிழ் பேசுகின்றவர்களை வழிமறித்து சோதனை எனும் பெயரில் ,பணப்பையிலுள்ள பணத்தினை எடுத்திவிட்டு ஓடிவிடுகின்ற இரு சம்பவங்கள் நடந்தேறியுள்ளன.இந்த இரண்டு சம்பவங்கள் மட்டுமே எங்கள் செய்தி பிரிவுக்கு கிடைத்துள்ளன. பெரும்பாலும் இந்த பகுதியில் தொழில் நிமிர்த்தம் வாடைகைக்கு அறைகள் எடுத்து தங்கி இருப்பவர்கள் மலையகத்தை சார்ந்தவர்களே.

எனவே இது தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்கின்ற அதே நேரம் இப்படியான சம்பவங்கள் தொடர்பில் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தாலே இவ்வரான சம்பவங்களை தடுக்கமுடியும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button