மலையகம்

மலையக இளைஞர் , யுவதிகளின் சுயத் தொழிலை ஊக்குவிக்கும் முகமாக டயகம மற்றும் வட்டக்கொடை ஆகிய பிரதேசங்களில் கூட்டுப்பண்ணை கட்டிடத்திற்க்கான பணிகள் விரைவில்…

மலையக இளைஞர் , யுவதிகளின் சுயத் தொழிலை ஊக்குவிக்கும் முகமாக டயகம மற்றும் வட்டக்கொடை ஆகிய பிரதேசங்களில் காணப்படும் பிரஜா சக்தி நிலையங்களில் நிர்மானிக்கப்பட்டு வருகின்ற கூட்டுப்பண்ணை கட்டிடத்திற்க்கான பணிகள் விரைவில் பூர்த்தியாக உள்ளது.  


 

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் சௌபாக்கிய நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் மலையகத்தில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி பணிகளில் இந்த கூட்டுப்பண்னை அபிவிருத்தியும் ஒன்றாகும். 
 

தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு அமைச்சின் கீழ் இயங்கும் சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகர்த்த மன்றத்தின் கீழ் இயங்கும் பிரஜாசக்தி நிலையங்களில் முதன் முறையாக இராஜாங்க அமைச்சர்  ஜீவன்  தொண்டமான்  தலைமையில் தற்போது இந்த கூட்டுப்பண்னைக்கான நிர்மானப் பணிகள் இடம்பெற்று வருகின்றது. 

சென்ற வருடம் 11.12.2020 அன்று  வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்ட கூட்டுப்பண்னை நிர்மானத்திற்கான ஆரம்ப பணிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் வேண்டுகோளுக்கு அமைய விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் நிர்மானப்பணிகள் பூர்த்தியானவுடன் உடனடியாக கூட்டுப்பண்ணைக்கான கைத்தொழில் நடவடிக்கைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button