செய்திகள்

மலையக ஊடகவியலாளர் மீது தாக்குதல் முயற்சி ?

இலங்கையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தனியார் தமிழ் வானொலியொன்றில் கடமையாற்றிய தனக்கு, நிர்வாகம் அச்சுறுத்தல் விடுத்ததாக தெரிவித்து சிரேஷ்ட ஊடகவியலாளர் கே.எம்.ரசூல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.

நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள் தன்னை அறையொன்றிற்குள் அழைத்து, அச்சுறுத்தல் விடுத்தது மாத்திரமன்றி, தாக்குதல் நடத்துவதற்கும் முயற்சித்துள்ளதாக ஊடகவியலாளர் கே.எம்.ரசூல் தெரிவித்தார்.

குறித்த வானொலியில் பணியாற்றிய பலர் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், சிரேஷ்ட ஊடகவியலாளர் கே.எம்.ரசூல் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதுடன், கிருலப்பனை பொலிஸ் நிலையத்தில் நேற்றைய தினம் குறித்த ஊடகவியலாளர் தற்பாதுகாப்பு கருதி முறைப்பாட்டையும் பதிவு செய்துள்ளார்.

இந்த அச்சுறுத்தல் தொடர்பில் தான் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, சட்ட ஆலோசனைகளை பெற்று வருவதாக கே.எம்.ரசூல் கூறுகின்றார்.

இந்த முறைப்பாடு தொடர்பில் எமது செய்திப் பிரிவு கிருலப்பனை பொலிஸ் நிலையத்துடன் தொடர்புக் கொண்டு வினவியது.

சம்பவம் தொடர்பில் முறைப்பாட்டாளர் தரப்பு தகவல்களை பெற்றுக் கொண்டுள்ளதாகவும், இனிவரும் காலங்களில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்தவுள்ளதாகவும் பொலிஸ் நிலையத்தின் அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.

சிரேஷ்ட ஊடகவியலாளர் கே.எம்.ரசூல், ஊடகத்துறையில் சுமார் இரண்டு தசாப்தம் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
image download