மலையகம்

மலையக கல்வி வர்ச்சிக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய அமரர் மாரிமுத்துவின் மறைவிற்கு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் இரங்கல்.

மலையக கல்வி வளர்ச்சிக்கும்,உயர்விற்கும் தன்னை அர்ப்பணித்து சேவையாற்றியவர்களில் அமரர் மாரிமுத்து அவர்களின் மறைவு மிகவும் பேரிழைப்பாகும் என இராஜாங்க அமைச்சர் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவரது இரங்கல் செய்தியில் தெரிவித்துளதாவது.
அத்தோடு ஆரம்ப காலங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயாவின் காலத்தில் அவர்களுடன் இணைந்து செயற்ப்பட்டவர்களில் அமரர் மாரிமுத்தும் ஒருவராவர்.

மேலும் மலையகத்தின் சிறந்த ஆளுமைமிக்க கல்விமான்களில் ஒருவர் அமரர் மாரிமுத்து ஆசிரியராகவும், பல பாடசாலைகளில் அதிபராகவும்,கல்வி பணிப்பாளராகவும் ,நுவரெலியா பிரதேச சபையின் முன்னால் தலைவராகவும் பணியாற்றிய மாரிமுத்துவின் மறைவு பேரிழைப்பாகும்.

அமரர் மாரிமுத்துவின் மறைவு மலையக சமூகத்திற்கு ஒரு பெரும் இழப்பாகும் என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button