மலையக சிறுவர்களை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு பேரணி ஒன்று இன்று (15.06.2018) அக்கறப்பத்தனை பிரதேசத்தை சார்ந்த இளைஞர்கள் மற்றும் தோட்ட மக்களால் முன்னெடுக்கப்பட்டது.
தலவாக்கலையில் இடம் பெற்ற சம்பவம் நீதிமன்ற விசாரணையில் இருக்கின்ற நிலையில், மலையக சிறுவர்களை பாதுகாப்போம் என்றும் மக்களுக்கு சிறுவர்கள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த பேரணியை முன்னெடுத்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
மேலும் சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அதனை தீர்ப்பதற்கான வழிவகைகள் சிறுவர்களை காப்பாற்றுவது நமது கடமை என்றும் இனிவரும் காலங்களில் சிறுவர் நலனில் அனைவரும் அக்கறையுடன் செயல்படவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.