...
செய்திகள்

மலையக தியாகிகள் தினம் இன்றாகும். 

மலையகத் தமிழர்களின் அரசியல் மற்றும் தொழிற்சங்க உரிமைகளுக்காக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின்போது உயர் தியாகம் செய்த தியாகிகளை இன்றைய நாளில் நினைவுகூருவோம்.   
1939 டிசம்பர் மாதத்தில்தான் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் சம்பள உயர்வுக்கான முதலாவது தொழிற்சங்கப் போராட்டம் முல்லோயாவில் ஆரம்பமானது. இப்போராட்டம் பல நாட்கள் தொடர்ந்தன. 
1940 ஜனவரி 10 ஆம் திகதி 'முல்லோயா கோவிந்தன்' , சுட்டுக்கொல்லப்படுகின்றார். தொழிலாளர்களின் உரிமைகளுக்காக அவர் தனது உயிரையே கொடையாக வழங்குகின்றார். அந்த வீரன் வீரமரணமடைந்த நாள்தான் மலையக தியாகிகள் தினமாக நினைவுகூரப்பட்டுவருகின்றது.
ஜனவரி 10 ஆம் திகதியை, மலையக தியாகிகள் தினமாக அனுஷ்டிப்பதற்கு கடந்த 2019 டிசம்பர் 15 ஆம் திகதி தலவாக்கலை, டெவோனில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. 
இதன்படி முதலாவது நினைவேந்தல் நிகழ்வு 2020  மஸ்கெலியாவில் நடைபெற்றது. இதன்போது மலையக கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர்.  2021 இல் பத்தனை சந்தியில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
சனத் 

Related Articles

Back to top button


Thubinail image
Screen