கல்விமலையகம்

மலையக தொழிலாளர் வர்க்கம் மூலம் ரக்வானை பிரதேச பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்..

மலையக தொழிலாளர் வர்க்கம் மூலம் ரக்வானை பிரதேச ஐந்து பாடசாலைகளை சேர்ந்த ஐம்பது மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன.

குறித்த நிகழ்வு ரக்வானை பரிவான் தமிழ் மகா வித்தியாலயத்தில் இன்று (21.09.2019) காலை இடம் பெற்றது.
இந்த நிகழ்வில் மலையக தொழிலாளர் வர்க்கத்தின் ஆலோசகரும்,தேசபந்து தேச அபிமானியுமான பதூர் பாபா கலந்து சிறப்பித்தார்.

இந்த நிகழ்வில் ரக்வானை பிரதேசத்தை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு பாடசாலையிலிருந்தும் பத்து மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகள், பாடசாலை புத்தக பைகள் மற்றும் பாதணிகள் என்பன இதன் போது வழங்கப்பட்டன.

Related Articles

Back to top button