மலையகம்
யாழ் மண்ணில் மலையக நாட்டாரியல் ஆய்வாளர் விமலநாதனுக்கு “மலையக நாட்டாரியல் நட்சத்திரம்” விருது
மலையக நாட்டாரியல் ஆய்வாளர் விமலநாதனுக்கு யாழ் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தால் “மலையக நாட்டாரியல் நட்சத்திரம்”என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது .
கடந்த சனிக்கிழைமை (16.06.2018) அன்று யாழ்ப்பாண நாவலர்மண்டபத்தில் மாலை 03மணிக்கு நடைபெற்ற “அரசியல் சிந்தனை நூல்வரிசை பத்து சிறு நூல்கள்”வெளியீட்டு விழாவிலேயே விமலநாதன் கௌரவிக்கப்பட்டதோடு அவருக்கு “மலையக நாட்டாரியல் நட்சத்திரம்” என்ற விருதும் வழங்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் விமலநாதனின் நாட்டார் பாடல்களும் சபை கைத்தட்டல்களோடு இடம்பெற்றது.
விமலநாதன் மலையக நாட்டார் பாடல்கள் பலவற்றை ஆவணப்படுத்தி வைத்துள்ளதோடு பல பொது நிகழ்வுகளில் நாட்டார் பாடல்கலை பாடுவதோடு,அது தொடர்பான விளங்கங்களையும் வழங்கி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திரசெல்வன்