மலையக பாடசாலைகளில் மரியாதை குறைவாக நடத்தப்படும் ஆசிரியர்கள்
இரண்டு வருட ஆசிரிய பயிற்சியின் பின் பாடசலைகளுக்கு சென்ற மலையக ஆசிரியர்கள் தாம் சென்ற பாடசாலைகளில் மரியாதை குறைவாக நடத்தப்படுவதாக குறிப்பிடுகின்றனர்.
கடந்த காலங்களில் ஆசிரிய ஆசிரியர் கலாசாலையில் தமது பயிற்சிகளை நிறைவு செய்து கொண்டு ஆசிரியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பாடசாலைக்கு சேவைக்கு திரும்பி இருந்தனர்.
இந்த நிலையில் பாடசாலை நிர்வாகத்தால் சில நேரங்களில் அவர்கள் அமர்ந்து உணவு உண்பதற்கு கூட இடம் ஒதுக்கி கொடுப்தில்லையாம்.மேலும் தமக்கான பாடங்கள் முடிந்த பிறகு ஒய்வு நிலைக்கு இருப்பதற்கு ஒரு ஆசனமும் இல்லாமல் பாடசாலை முடியும் வரை வகுப்பறையின் வெளியில் ஓரத்தில் இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
மலையக பாடசாலைகளில் ஆசிரியர்களுக்கிடையே இப்படியான பிரச்சனைகள் நிலவுகின்ற போது எப்படி அவர்களால் சிறந்த மாணவர்களை உருவாக்கமுடியும்.
ஷான் சதீஸ்