மலையகம்
மலையக பாடசாலைகளில் மாணவர்கள் பரீட்சைகளுக்கு அனுமதிக்கப்படாமை தொடர்பாக இன்று மனித உரிமை ஆணைக்குழுவில் விசாரணை ..?

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் முறைபாட்டுக்கு அமைய ,மாணவர்கள் பாடசாலைகளுக்கு உள்வாங்க படா மை தொடர்பாக இலங்கை மனிதஉரிமை ஆணைக்குழுவில் இன்று விசாரணை ஒன்று இடம்பெறுகின்றது.
குறித்த விசாரணை இன்று காலை 9.45 மணியளவில் இடம்பெறுகின்றது.
மலையக பாடசாலைகளில் பரீட்சைகள் எழுத (பெரும்பாலும் சாதாரணதரம்) அனுமதிக்கப்படாத மாணவர்கள் தொடர்பாகவும், 06ம் தரத்துக்கு பாடசாலைகளுக்கு அனுமதி வழங்கப்படாத பாடசாலைகள் தொடர்பாகவும் இரண்டாம் கட்ட விசாரணை இன்று இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் இடம்பெறுவதாக இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் தெரிவித்தார்.