செய்திகள்

மலையக பெருந்தோட்ட பகுதிகளில் 1132 கிலோ மீட்டர் தூர வீதிகளை புனரமைக்க அனுமதி..

மலையக பெருந்தோட்ட பகுதிகளில் 1132 கிலோ மீட்டர் தூர வீதிகளை புனரமைக்க அனுமதி கிடைக்கப்பட்டுள்ளது.

இதற்கான அனுதியை நெடுஞ்சாலைகள் அமைச்சு வழங்கியுள்ளதாக தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

இது தொடர்பாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜொன்சன் பெர்ணான்டோ மற்றும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்குமிடையில் சந்திப்பொன்று நேற்று மாலை (18/08)கொழும்பில் இடம்பெற்றது.
இதன்போது அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் எண்ணக்கருவுக்கு அமைய நாட்டை கட்டியெழுப்பும் சௌபாக்கியா தொலைநோக்கு அபிவிருத்தியின் கீழ் தோட்டப்பகுதிகளில் 1132 கிலோ மீட்டர் வீதிகள் புனரமைப்புக்க அனுமதி கிடைக்கப்பட்டுள்ளது.

இராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் ஜோன்சன் பெர்ணன்டோவின் ஏற்பாட்டில் தோட்ட பாதைகள் புனரமைப்பதற்கான அனுமதி கிடைக்கப்பட்டுள்ளது என தெரிவித்த இராஜாங்க அமைச்சர் வெகு விரைவில் தோட்ட பாதைகள் புனரமைக்கபடுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுமென மேலும் தெரிவித்தார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen