அரசியல்செய்திகள்

மலையக மக்களை அரசாங்கம் ஏமாற்றியுள்ளது – சாடுகிறார் மஹிந்த

2 015 அம் ஆண்டு மைத்ரிபால சிறிசேனவும் ரணில் விக்கிரமசிங்கவும் கூட்டாக ஆட்சியமைப்பதற்கு மலையக மக்களின் பங்கு அளப்பரியதாக காணப்பட்டது.

ஆனால் மலையக மக்களின் ஒட்டுமொத்த தேவையாக காணப்படும் சம்பள உயர்வு தொடர்பில் அரசாங்கம் போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறியுள்ளது என எதிர்க்கட்சி  தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ் குற்றஞ்சுமத்தினார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற அனுதாப பிரேரணையில் போது உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மலையக மக்களின் வாக்குகளை பெற்று அதன் மூலம் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் அரசாங்கத்தில் அங்கம் வகித்தும் கூட , மலையக மக்களுக்கு சம்பள உயர்வு பெற்றுக் கொடுக்கப்படாமை துர்திஷ்டமானது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த நான்கரை ஆண்டுகளாக இந்த இழுத்தடிப்பு தொடர்வதாகவும் இது தொடர்பில் தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் அது மாத்திரமன்றி அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் அரச ஊழியர்களுக்கு 2500 ரூபா சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் , பகுதியளவிலான அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு இன்னும் இழுபறி நிலையில் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related Articles

Back to top button