அரசியல்செய்திகள்

மலையக மக்கள் எதிர்நோக்கி வரும் குடிநீர் பிரச்சினை தொடர்பாக அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுடன் அனுஷா கலந்துரையாடல் ..

நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அவர்களுக்கும் சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் அனுஷா சந்திரசேகரனுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று (15) பத்தரமுல்லையில் அமைந்துள்ள அமைச்சின் காரியாலயத்தில் இடம்பெற்றது. 

இச் சந்திப்பின் போது மலையக மக்கள் எதிர்நோக்கி வரும் குடிநீர் பிரச்சினை மற்றும் சுகாதார ரீதியிலான பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் அமைச்சின் மூலம் விரைவான தீர்வுத்திட்டங்களை வழங்குவதாக அமைச்சர் உறுதியளித்திருந்தார்.

மேலும் உயர்தரம், மேற்படிப்புகளை மேற்கொண்டு தொழில் இன்மை காரணமாக பாரிய  சவாலை எதிர்கொண்டிருக்கும் எம் இளைய சமுதாயத்தினருக்கும் தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது சம்பந்தமாகவும் இச் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும் அமரர் சந்திரசேகரனின் நண்பர் என்ற ரீதியில் கௌரவ அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அவர்கள் அமரர் சந்திரசேகரன் மலையகத்தில் மேற்கொண்ட அபிவிருத்தி திட்டங்களையும், சேவைகளையும் அனுஷா சந்திரசேகரனின் ஊடாக தொடர்ந்து முன்னெடுத்துச்செல்வதற்கு  தனது அமைச்சின் மூலமான முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக தெரிவித்திருந்தார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com