அரசியல்நுவரெலியாமலையகம்

மலையக மக்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களிடம் எழுத்து மூலமான கோரிக்கைகளை முன்வைக்கவேண்டும்.

கண்டி_சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் (ISD)ஏற்பாட்டில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மலையக பெருந்தோட்ட மக்கள், போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களிடம் எழுத்து மூலமான கோரிக்கைகளை முன்வைத்து இணக்கப்பாடுகளை எற்படுத்திக்கொள்வதற்கான கலந்துரையாடல் ஒன்று நேற்று 07/09/2019 ஹெட்டன் சீடா வள நிலையத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மலையக சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்,புத்திஜீவிகள்,ஆசிரியர்கள் பங்கு பற்றி காணியுரிமை,மொழியுரிமை,எமது தேசிய அடையாளம்,கல்வி,சுகாதாரம்,பொருளாதாரம் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல மக்கியமான விடயங்களை முன்வைத்தனர்.

மேற்கண்ட முன்மொழிவுகளை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களிடம் முன்வைத்து இணக்கப்பாடுகளை ஏற்படுத்தி கொண்டு செயற்பட இதன் போது தீர்மாணிக்கப்பட்டது.

Related Articles

Back to top button