அரசியல்மலையகம்

மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் மாநாடு

மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் மாநாடு கடந்த (17.04.2021) சனிக்கிழமை  நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவர் அமரர் பெரியசாமி சந்திரசேகரனின் 64 வது ஜனன தினமும் நினைவு கூறப்பட்டதுடன் அன்னாரின் உருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்து கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

தொடர்ந்து நிகழ்வில் மலையகயத்தில் விளையாட்டுத்துறை மற்றும் கலைத்துறைகளில் சாதித்து வருபவர்கள் கெளரவிக்கபட்டதுடன் அதிதிகளின்  உரைகளும் இடம்பெற்றன.

இனிவரும் காலங்களில் அமரர் பெரியசாமி சந்திரசேகரனின்  ஜனன தினமான ஏப்பரல் 17 ஆம் திகதி மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் மாநாட்டு தினமாக கொண்டாடுவதற்கு தீர்மாணிக்கப்பட்டது.

நிகழ்விற்கு அதிதிகளாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் முன்னணியின் பொது செயலாளர் பேராசிரியர் எஸ்.விஜேசந்திரன் தேசிய அமைப்பாளர் ஆர்.ராஜாராம் மற்றும் கட்சியின் உயர் உறுப்பினர்கள் முன்னணியின் இளைஞர் அணி உயர் அங்கத்தினர் உட்பட பெரும் திறலான மலையக இளைஞர்கள் கலந்துக் கொண்டார்கள்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com