அரசியல்செய்திகள்மலையகம்

மலையக மக்கள் முன்னணி ஸ்தாபக தலைவரும் முன்னாள் அமைச்சருமான பெரியசாமி சந்திரசேகரனின் 11வது சிராத்த தினம் தலவாக்கலையில் ..

மலையக மக்கள் முன்னணி ஸ்தாபக தலைவரும் முன்னாள் அமைச்சருமான பெரியசாமி சந்திரசேகரனின் 11வது சிராத்த தினம் தலவாக்கலையில் அவரின் பூர்வீக இல்லத்தில் ஜனவரி (01)
அனுஸ்டிக்கப்பட்டது.

புதிதாக உதயமாகியுள்ள “சந்திரசேகரன் மக்கள் முன்னணி” கட்சியின் ஏற்பாட்டில் முன்னணியின் பொதுச் செயலாளரும் அமரர் பெ.சந்திரசேகரனின் புதல்வியுமான அனுஷா சந்திரசேகரன் தலைமையில் சிரார்த்த தின நிகழ்வு நடைபெற்றது

புதிய முன்னணியின் உறுப்பினர்கள் பங்கு கொண்ட இந்த நிகழ்வினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அனுஷா சந்திரசேகரன் தெரிவித்ததாவது.

எனது தந்தையும் அமரரும்மான சந்திரசேகரன் மலையக வாழ் மக்கள் மற்றும் இன்றி அனைத்து தமிழ் மக்களுக்கும் அரசியல் ரீதியாக முன்னுதாரணமாக செயற்பட்ட தலைவர் என சுட்டிக்காட்டினார்.

எம் மக்களுக்கான அடிப்படை உரிமைகளை பெற்றுக் கொடுப்பதில் முன்னின்று உழைத்த தலைவர் என்பதை சொல்வதில் “சந்திரசேகரன் மக்கள் முன்னணி மற்றும் “சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணி” ஆகியவை பெறுமிதம் அடைகிறது.

அத்துடன் கடந்த 2020ஆம் ஆண்டு முடிவுற்றுள்ள நிலையில் புதிய ஆண்டு பிறந்துள்ளது இதில் மலையக மக்களின் உரிமைகளுக்காக அமரர் சந்திரசேகரனின் கனவுகள் நனவாகும் விதந்தில் எமது செயற்பாடுகள் அமையும் என நம்பிக்கை தெரிவித்தார்.

கடந்த ஆண்டில் உருவெடுத்த கொரோனா தொற்றின் தாண்டவத்தால் மலையகத்தில் அன்றாடம் உழைக்கும் எனது தொழிலாளர்கள் தமது தொழில் மற்றும் வாழ்வாதார செயற்பாடுகளில் பாரிய வீழ்ச்சிக்கு ஆளாகினர்.

இந்த புதிய ஆண்டு இம்மக்களுக்கு சகல உரிமை விடயங்களிலும் சுபீட்சத்தை கொடுக்க வேண்டும் என ஆண்டவனை பிரார்த்தனை செய்ய வேண்டும்.

அதேநேரத்தில் தோட்ட தொழிலாளர்கள் இன்றும் பழைய காலத்தில் காணப்பட்ட முறைகளின்படியே தொழில் மற்றும் உரிமைகள் உள்ளிட்ட தொழில் பாதுகாப்பு விடயங்களில் வழிநடத்தப்பட்டு வருகின்றனர்.

இவர்களின் தொழில் நிலைமையில் மாற்றம் ஏற்பட வேண்டும் அதற்காக தேயிலை மற்றும் பெருந்தோட்ட தொழில் துறை நவீனமயயப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை நாம் இந்த ஆண்டில் கோரிக்கையாக முன்வைக்கின்றோம்.

தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு தொடர்பில் அரசுடனும், கூட்டு ஒப்பந்த தரப்பினரும் பேசி விருக்கின்ற இத் தருணத்தில் தொழிலாளர்களின் எழிமையான வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், வாழ்வாதாரத்தை உயர்த்திக்கும் வகையிலும் சம்பள உயர்வு பெற்று கொடுக்க நாமும் வழியுறுத்துவதாக அவர் கருத்திற்றார்.

அத்துடன் தொழிலாளர்களின் உழைப்பு நாளுக்கு நாள் சுரண்டப்பட்டு வருவதை அவ்ப்போது எமது தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர் இதை நாமும் அவதானிக்கின்றோம்.

இந்த நிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும் .ஆகையால் தொழிலாளர்கள் விடயத்தில் உயரிய மட்டத்தில் பேச்சு வார்த்தை நடத்துவோர் சம்பள உயர்வுடன் தொழிலாளர்களின் மறுக்கப்பட்டு வரும் அடிப்படை உரிமைகள் உள்ளிட்ட நசுக்கப்படும் தொழில் பாதுகாப்பு விடயங்களையும் உள்ளடக்கி சிறப்பான தீர்வினை பெற்றுக்கொடுக்க வழியுறுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Back to top button