மலையக மண் மனக்கும் தேசிய பொங்கலும், கலந்துரையாடலும்
கொட்டும் மழையிலும் வெள்ளத்திலும் மலையக தமிழர்களின் 200 வருட இலங்கை வருகையையும் வரலாற்றையும் நினைவு கூறும் வகையில் மலையக தேசிய தைப்பொங்கலை அர்த்தமுள்ளதாக ஆக்க கடந்த 31.01.2018 கந்தப்பளை சென் ஜோன்ஸ் தோட்ட கெயார் நிலையத்தில் மலையக மண் மனக்கும் தேசிய பொங்கலும் கலந்துரையாடலும் நிகழ்வு இடம்பெற்றது . வருடா வருடம் நடைபெறும் இந்த தேசிய பொங்கல் விழாவை இம் முறை தெரிவுசெய்யப்பட்ட 50 செயற்பாட்டார்களுக்கான செயலமர்வாக மலையக பண்பாட்டு தமிழர் பேரவை , மலையக சமூக ஆய்வு மையம் ,மலையக பாட்டாளிகள் கழகம் ,மீனாட்சி அம்மாள் பெண்கள் அமைப்பு ,மலையக இளம் தமிழ் ஊடகவியாளர்கள் சங்கம் ஆகிய மலையக சமூக அமைப்புகளும் ஒன்றினைந்துக் ஒழுங்குசெய்ந்திருந்தன பொங்கல் விழாவில் பாரம்பரிய தமிழர் கலாசார உடை அணிந்து பலரும் இதில் ஆர்வத்தோடு பல பிரதேசங்களையும் பிரதிநிதிதுவபடுத்தும் வகையில் பங்குபற்றினர்.இதன் போது மலையக மக்களின் பாரம்பரிய முறையிலான ஓர் உலைப் பொங்கலை தப்பிசையுடன் நட்டார் பாடல்களை இசைக்க அனைவரும் ஒவ்வொரு பிடி அரிசியை மண்பானையிட்டனர் இது கட்சி அரசியல் தொழிற்சங்கம் சாதி ,மதமற்று அனைத்து பேதங்களை மறந்து மலையகத் தேசிய பொங்கல் சமூக செயற்பாட்டார்களினால் வைக்கப்பட்டு மலையக மக்களின் பாரம்பரிய இசையான தப்பும் இசைக்கப்பட்டு, மலையக நாட்டார் பாடலும் பாடப்பட்டது. தொடர்ந்து காலை 10மணிக்கு மலையக மக்கள் தொடர்பான கலந்துரையாடல் ஆரம்பமானது. மலையக தியாகிகளை நினைவு கூறும் வகையில் 2 நிமிட மெளன அஞ்சலி செய்யப்பட்டது. தொடர்ந்து வரவேற்பு உரையினை மலையகத் தமிழர் பண்பாட்டு பேராவையின் உப தலைவர் நவனீதன் நிகழ்த்தினார். தொடர்ந்து நாட்டார்யியல் ஆய்வாலாளர் த.விமலநாதன் பாடல்களை இசைத்தார் தொடர்ந்து மலையக சமூக ஆய்வு மைத்தின் மத்திய குழு உறுப்பினர் திரு. ஜெ.ஜெயகுமார் அறிமுக உரையினை நிகழ்த்தினார். தொடர்ந்து தலைமையுரையினை மலையக தமிழர் பண்பாட்டு பேராவையின் ஆலோசகர்களில் ஒருவரான பிலிப் இராமையா தலைமையை உரையை நிகழ்த்தினார். கலந்துரையாடலில் அருட் தந்தை மா.சக்திவேல் மலையகமும் தேசிய பொங்கலும். சட்டத்தரணி சுபாகரன் மற்றும் பகிரதன் ஆகியயோர் இணைந்து மலைய தமிழர்களும் வடகிழக்கு தமிழர்களின் உறவு என்ற தலைப்பில் கருத்துக்களை முன்வைத்துடன் சபையினரின் கேள்விகள் சிந்திக்க தூண்டின. அரசியல் ஆய்வாளரும் சமூக விஞ்ஞான ஆய்வு மைத்தின் இணைபாளருமாகிய சி.அ .யோதிலிங்கம் மலையக தமிழரின் அரசியல் இலக்கும் வழி வரிபடம் என்ற தலைப்பு அனைவரையும் கவர்ந்திருந்தது. இடையே நாட்டார் பாடல்களும் தப்பிசையும் ஒலித்தன. இவர்களோடு தொடர்ந்து மலையக தமிழர் பண்பாட்டு பேராவையின் செயலாளர் வேலு இந்திரசெல்வன் மலையக தமிழர்களின் தேசியம் எதிர்நோக்கும் நெருக்கடிகளும் தீர்வுகளும் ஹங்குரான் கெத்த விராலிகல தோட்ட மக்களின் வாழ்க்கை நடைமுறைகளை முன்வைத்தார். தொடர்ந்து சபையோரின் விமசனங்களும் கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன.இதன் போது பெண்கள் உற்சாகமாக கருத்துக்களை முன்வைத்தனர். மலையகத் தமிழர் பண்பாட்டு பேராவையின் தலைவி எஸ்தர் நன்றி பகிர, நாட்டார் பாடல்களுடன் நிறைவடைந்ததுடன் மலையத் பாராம்பரிய காலாசார உணவும் பரிமாறப்பட்டது. சமூக செயற்பாட்டாளர்கள் முன்வந்து தமது பொறுப்புகளையும் பொருளாதார உதவிகளை நல்கியிருந்தனர். முழு நிகழ்வையும் ஆர் .ஜே .தனா தொகுத்து வழங்கினார்.