செய்திகள்மலையகம்

மலையக மார்க்கத்தினுடனான சேவைக்காக இறக்குமதி செய்யப்பட்ட அதிக வலு கொண்ட 04 ரயில் என்ஜின்கள்….

மலையக மார்க்கத்தினுடனான சேவைக்காக இறக்குமதி செய்யப்பட்ட அதிக வலு கொண்ட 04 என்ஜின்கள் , கொழும்பு துறைமுகத்தை அண்மித்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இம்மாத இறுதிக்குள் மேலும் 04 அதிக வலுகொண்ட என்ஜின்கள் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் டிலந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

தற்போது, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அதிக வலுகொண்ட என்ஜின் ஒன்று, மலையக மார்க்கத்திலான சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த அனைத்து அதிக வலுகொண்ட என்ஜின்களும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட பின்னர், மலையக மார்க்கத்தினுடனான ரயில் சேவைகளில் இணைத்துக்கொள்ளப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button