கட்டுரை

மலையக மேதினமும் சிவனுலட்சுமனின் உரிமைக்கான போராட்டமும்

மேதினம் என்பது தொழிலாளர்கள் உரிமைக்காக எழுந்த தினமாகும். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம், எட்டு மணி நேர வேலை, வாழ்வதற்கான உரிமைகளை உயர்த்தி பிடித்து அதனை நோக்கிய போராட்ட பயணத்தை தொடர்ந்துக் கொண்டியிருக்கும் தினமாகும். அமெரிக்காவிலுள்ள சிக்காக்கோ நகரில் தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் தங்கள் உரிமைக்காக அணித்திரண்டனர். முதலாளித்துவவாதிகள் கொடூரமாக அவ் எழுச்சியினை அடக்கினர்.பல தொழிலாளர்கள் இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டனர். முன்னின்று போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர்கள் தூக்கு மேடைக்கு அனுப்பப்பட்டனர்.அவர்களில் ஒரு தொழிலாளி சிரித்துக்கொண்டோ வரலாற்றை உலகம் ஒரு நாள் பேசும்” எனக் கூறிக் கொண்டே சென்றதை மேதின வரலாற்று பதிவு செய்துள்ளது.

இத்தகைய உரிமைக்காக போராடி வென்ற வரலாற்றை உலக முழுவதும் மே முதலாம் திகதி கொண்டாடப்படுகின்றது.இத்தகைய சூழ்நிலைகளில் இலங்கையில் மலையக மக்களின் வாழ்வியலில் மேதினத்திற்கும் எந்த சம்பந்தம் ? இலங்கையில் மத்திய மலைப் பகுதியினை வளம் கொழிக்கும் பூமியாக மாற்றிய தொழிலாளிவர்க்கம் வாழ்கின்றனர். உலக தொழிலாளிவர்க்கத்தின் ஒரு பகுதியாகவும் இலங்கையின் அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட தொழிலாளர் பகுதியின் ஒரு பகுதியாகவும் வாழ்ந்து வருகின்றனர்.அந்தவகையில் மேதினத்தை அர்த்தபூர்வமாகவும் அவர்கள் வர்க்க அரசியலை உயர்த்தி பிடிப்பதற்கு இழந்த உரிமைகளை மீட்டெடுப்பதற்க்குமான தவிர்க்க முடியாத தினமாகவும் மலையக மக்கள் போராட்டத்தனை வெளிப்படுத்தும் தினமாகவும் உள்ளது.

பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் மலையக தோட்டங்களுக்கு மேதினம் கொண்டாடும் உரிமை மறுக்கப்பட்டது. மிக குறைந்த ஊதியத்தில் மிக கூடுதலான உழைப்பை வழங்கியவர்களுக்கு மேதினம் பற்றிய சிந்தனை நடைமுறைகளை தோட்டங்களுக்கு செல்வதை கவனமாக பிரித்தானியர் தடை செய்தனர். தொடர்ச்சியாக நடந்த தொழிற்சங்க போராட்டங்கள் ஆங்காங்கே தோட்டங்களில் தண்ணிச்சசையாக நிகழ்ந்த போராட்டங்கள் ஊடாக மேதினம் பற்றிய செய்திகள் பரவின. குறிப்பாக ரொஸ்கிய வாத இடது சாரிய இயக்கங்கள் தோட்டங்களில் ஊடுருவி வேலை செய்த போது மேதினம் பற்றிய சிந்தனைகள் தலைத் தூக்கின.எவ்வாறாயினும் சுதந்திரத்திற்கு பின்னரான காலப்பகுதியில் இலங்கை அரசாங்கமானது மேதினத்திற்கான பொது விடுமுறை தினம் அறிவிக்கப்பட்ட பின்னர் மலையக பகுதிகளில் மேதினங்கள் நடத்தப்பட்டன. மலையகத்தில் இருக்கும் பாரம்பரியம் புதியதொழிற்சங்கங்கள் மேதினத்தைப் பற்றிய பிரக்ஞை இல்லாமல் ஒரு களியாட்ட விழாவாகவே இன்றும் மேதினத்தை கொண்டாடி வருகின்றனர். தோட்டத் தொழிலாளிகளின் சம்பள பிரச்சினை கூட்டு ஒப்பந்தம் என்ற பெயரில் மழுங்கடிக்கப்பட்டு வருகின்றது.
இன்னும் இவர்களுக்கான தனி வீடுகள் எட்டாக்கனியாக உள்ளது. கல்வி,மருத்துவம்,இதர சேவைகள் இன்னும் இவர்களுக்கு சென்றடையவில்லை.இவற்றையெல்லாம் மறந்த தொழிற்சங்கங்கள் இப்பிரச்சினைகளை மறைப்பதற்காக களியாட்ட விழாக்கள் போல மேதினங்களை நடத்துகின்றனர்.

உண்மையில் மேதினத்தை மலையகத்தில் அர்த்தபூர்வமாக நடத்துகின்றவர்கள் இடதுசாரி இயக்கங்களே. மறைந்த தோழர் சண்முகதாசன் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பகுதியான செங்கொடி சங்கமும்,அதனை சார்ந்த இடது சாரி இயக்கங்களும் மேதினத்தினங்களை தொழில் உரிமைக்கான தினமாக இன்று வரை நடாத்தி வருகின்றனர்.மலையகத்தில் காணப்படுகின்ற முற்போக்கான சில தொழிற்சங்கங்கள் தொழிலாளி சார்பாக மேதினத்தை நடத்தினாலும்;இதேசிய முதலாளித்து பங்காளி கட்சிகளின் இணைந்தே நடத்துகின்றனர் என்பது அவதானிக்கத்தக்கது.

இவ்வாறான நிலையில் 1977 ஆம் நடைபெற்ற சிவணு லட்சுமனின் போராட்டமும் உயிர்த்தியாகமும் மே மாதத்தில் நடந்தேறியது.மலையக மக்களின் காணி உரிமைகளை வலியுறுத்திய அப்போராட்டமானது மலையக தொழிலாளர் போராட்டத்தில் திருப்புமுனையாக காணப்படுகின்றது.

1977 ஆம் ஆண்டு மே மாதத்தில் சுமார் 7000 ஏக்கர் காணியின் சுவீகரிக்க டெவன் பகுதிகளுக்கு சென்ற போது அதனை தொடர்ந்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொலிசாரின் உதவியுடன் காணியினை அளக்க முற்பட்ட வேளையில் போராட்டம் கடுமையாக மாறியிருந்தது. போராட்டத்தைப் பற்றி அறிந்த சிவணு இலட்சுமனன் என்ற இளைஞன் ஆற்றைக் கடந்து வந்து போராட்டத்தில் கலந்துக்கொண்டார். போராட்டம் தொடர பொலிசாருக்கும் தொழிலாளர்களுக்கும் கடுமையான வாய்தர்க்கம் ஏற்பட்டது. போராட்டத்தை கைவிடாது காணி சுவீகரிப்பினை தடுத்து நிறுத்துவதில் தொழிலாளர்கள் உறுதியாக இருந்தனர். தொழிலாளர்களை பயமுறுத்திய போது பணியாது நிற்கின்றனர்.பொறுக்கமுடியாத பொலிசார் துப்பாக்கி பிரயோகம் செய்த போது சிவணு லட்சுமன் மார்பில் குண்டு பாய்ந்தது உடல் கொட்டகலை வைத்தியசாலைக்கு எடுத்து சென்ற போது சிகிச்சை பலன் அளிக்காது அவர் உயிர் பிரிந்தது.

போராட்டத்தில் மலையகத்தினை மலையகத்தில் இருந்தவர்களுக்கு அப்போதிருந்த பாராம்பரிய தொழிற்சங்கங்கள் சொந்த இலாபத்திற்காக பயன்படுத்திக் கொண்டனர். சிவணு லட்சுமனுக்கு ஒரு கல்லறை கூட அவர்களால் எழுப்பமுடியவில்லை.இன்றும் கூட அவருக்கு கல்லறை அமைப்பதற்கு அனுமதி மறுக்கப்படுகின்றது. மலையக படித்த புத்தி ஜீவிகள் சிவணு லட்சுமனின் மரணம் தற்காலிகமானது என தர்க்கம் புரிகின்றதை இன்றும் அவதானிக்க முடிகின்றது. மலையக அரசியலை சரியான திசை மார்க்கத்தில் முன்னெடுக்கத் தெரியாத சில புத்திஜீவிகளுக்கு சிவணு லட்சுமனின் மரணம் தற்காலிகமானதாக தெரியும்.சிவணு லட்சுமனின் மரணம் மலையகத்தில் மாத்திரமின்றி வடக்கு,கிழக்கு ,தெற்கில் காணப்படுகின்ற இடதுசாரி இயக்கங்கள் வரை பரவியிருந்தது.மரணத்தை கண்டித்து ஆர்பாட்டங்கள் நிகழ்ந்தன.ஹட்டன் ஹயிலன்ஸ் கல்லூரி மாணவர்கள் ஆர்பாட்டம் நடத்திய போது பொலிசார்கள் தடியடி பிரயோகம் செய்தனர்.சிலரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.சிவணு லட்சுமனின் உயிர்த்தியாகம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

உலக தொழிலாளர் வர்க்கம் எட்டு மணி நேர வேலை,உழைப்புக்க ஏற்ற ஊதியம் வலியுறுத்திய போராட்டம் நிகழ்த்தி உயிர்த்தியாகம் செய்தார்களோ அதே மாதத்தில் சிவணு லட்சுமனின் மலையக போராட்டமும் உயிர்த்தியாகமும் நடந்துள்ளது. மலையக மக்களுக்கு இருக்க வேண்டிய அடிப்படை காணி உரிமையினை வலியுறுத்திய முக்கிய போராட்டமாக இது அமைந்திருந்தது.

1960 களில் தோட்டக்காட்டான், கள்ளத் தோணி எனவும் இந்திய தொழிலாளர்கள் ,கூலிகள் என அழைத்தவர்களை மாற்றியது மலையக தமிழரை அடையாளத்தை முன்வைத்து செய்த ஆண்டாக கொள்ளப்படுகின்றது. மலையகம் என்பது புவியியல் பிரதேசமாகவும் மட்டுமின்றி அங்கு வாழ்கின்ற தொழிலாளர்கள் நடத்திய போராட்டங்கள் இடது சாரிய அரசியல் ,தொழிறசங்க அரசியல் எழுச்சிவுடாக சூ கிழ்ந்த மலையக தேசிய இனத்தின் வளர்ச்சிக்கான கூறுகளை 1960 களில் காணமுடிகின்றது. அதன் நீட்ச்சியாக சிவணு லட்சுமனின் போராட்டம் தனது இருப்பு அடையாளத்தை வலிவுறுத்தியதை போராட்டமாகவும் அதனை நோக்கிய பயணத்தை மேற்கொள்கின்ற காத்திரமான பார்வையினை பதிவினை முன் நிறுத்தியது.

காணி வேண்டும், சொந்த வீடு வேண்டும் என்ற சிந்தனை வாழ்வியலில் உழைப்பு பூர்வமானது. எனது நிலம் ,எனது வீடு என்ற அறிவு பூர்வமான நிலையினை எட்டும் போது தேசிய இன அடையாளத்திற்கான வெளிப்படையாக அமைந்துள்ளது. அந்தவகையில் மேதின மாதத்தில் நிகழ்ந்த சிவணு இலட்சுமனின் போராட்டமானது நில மீட்பு போராட்டமாக மட்டுமின்றி மலையக தேசிய சிறுபான்மையின் வளர்ச்சி கூறுகளை அதிகரித்து செல்கின்ற யதார்த்த நிலையினை கோட்டிற்கு காட்டுவதாக அமைந்துள்ளது. இப்போராட்ட காலத்தில் மலையக மக்களின் போராட்டங்களை கொணட அமைப்புக்கள் மலையக மக்கள் இயக்கம், மலையக இளைஞர் முன்னணி, மலையக இளைஞர் பேரவை ,மலையக வெகுசன இயக்கம், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தற்போது புதிய ஜனநாயக மாக்சிய லெனிச கட்சி (இடது) மலையக நல்வாழ்வு வாலிப சங்கம் ஆகிய தங்கள் மாநாடுகளில் மலையக மக்கள் தேசிய சிறுபான்மை இனமாக அறிவிக்க வேண்டும் என கருத்துக்களை முன்வைத்து வேலைத்திட்டங்களை முன்னெடுத்தனர் என்பது குறிப்படத்தக்கது.

பண்பாட்டு கலை இலக்கிய தளத்தில் தி.ஞானசேகரின் குருதிமலை என்ற நாவல் மக்கள் கலை இலக்கிய வட்டம்,மக்கள் நூலகம் வெளியிட்ட போராட்டத்தீ என்ற பாடல் தொகுப்பு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட புதிய பூமி இசு.முரளிதரன் வெளியிட்ட தியாக இயந்திரங்கள்,தேசிய கலை இலக்கிய பேரவை வெளிட்ட குன்றத்து குமுறல், மு.சிவலிங்கத்தின் மலைகளின் மக்கள் ,மல்லிகை சி.குமாரின் மாடும் வீடும் இராகலை பன்னீரின் புதிய தலைமுறைகள் ,சிவ ராஜேந்திரனின் கவிதைகள் போன்ற பல படைப்புக்கள் சிவணு லட்சுமனின் போராட்டங்களை நேரடியாகவூம் மறைமுகமாகவூம் பதிவூகளாகவூம் பார்வைகளாகவூம் வெளிவந்துள்ளது. மலையகத்தில் புத்திஜீவிகள் முன்வைக்கப்பட்ட பல்வேறு கருத்தரங்குகளில் ஆய்வூகளிலும் சிவணு லட்சுமனின் போராட்டங்களை பற்றிய கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

மலையக மக்கள் வாழ்வியலில் சிவணு லட்சுமனின் போராட்டமானது மலையக மக்களின் மாற்றத்திற்கான அரசியலின் உந்து சக்தியாக இருந்தது. மலையக மக்கள் தேசிய சிறுபான்மை இனத்திற்கான வளர்ச்சியானது அது குறுந்தேசிய அரசியலுக்குள் சிக்காமல் ஏனைய அடைக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட தேசிய சிறுபான்மை இனங்கள் ,பெரும்பான்மை இனங்களுடன் ஐக்கியப்பட்டு போராட்டக் கூடிய பாதையினை திறந்துவிட்டது. இதே மே மாதத்தில் தொழிலாளர் போராட்டத்தை இரத்த வெள்ளம் முழ்கடிக்கப்பட்ட தினத்திலிருந்து மீட்டெடுத்து தொழிலாளி வர்க்க போராட்டத்தை உயர்த்தி பிடித்து மே தினமாக பிரகடனப்படுத்தப்பட்ட அதே மாதத்தில் சிவணு லட்சுமனின் போராட்டமும் உயிர்த்தியாகமும் நிகழ்ந்திருப்பது இன்னும் தொழிலாளர்வர்க்க உரிமைக்காக போராட வேண்டிய செய்தியினை உணர்த்தியுள்ளது. உழைப்புக்கேற்ற ஊதியம் ,எட்டு மணிநேர வேலை ,ஓய்வூ நேரம் என்ற நிலைப்பாட்டுக்கு வர இன்னும் பயணிக்க வேண்டிய தூரம் உள்ளது. மலையக மக்கள் சம்பள பிரச்சினை ,வீடு காணி, கல்வி, பெண்கள் பிரச்சினை இன்னும் தீரவில்லை. உலகமயம்,தராளமயம் என்பவற்றிலிருந்து விடுதலை பெற வேண்டியூள்ளது .இதனை முன்னெடுப்பதற்கு சிவணு போராட்டத்தை அனுபவமாக கொண்டு புதிய பாதையில் பயணிக்க வேண்டிய நிலையில் உள்ளோம். மலையக தோட்ட தொழிலாளர்கள் சமூக விஞ்ஞானபூர்வமான அரசியல் இடைவெளியினை நிரப்புவதற்கு ஓன்று பட தேவையினை மேதினத்தை அர்த்தமுள்ளதாக இருக்கவேண்டும்.

ஜெ.சற்குருநாதன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button