அரசியல்விளையாட்டு

மலையக விளையாட்டு வீர வீராங்கனைகளை ஊக்குவித்தார் உதயா ..

46வது தேசிய விளையாட்டு விழாவில் மரதன் ஓட்டப்போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த மலையக வீரர்கள் இருவரையும் பாராட்டி தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி தலைவர், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் பரிசு வழங்கி வைத்தார்.

இதற்கான நிகழ்வு நுவரெலியாவில் இடம்பெற்றது. தொழிலாளர் தேசிய சங்கத்தின் நுவரெலியா மாநகர சபை உறுப்பினர் விஷ்ணுவர்தன் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர் நிரோஷன், கொத்மலை பிரதேச சபை உறுப்பினர் செந்தில், தொழிற்சங்க பிரதிநிதி சந்திரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது பெண்கள் பிரிவில் வெற்றி பெற்ற வீராங்கனை வேலு கிரிசாந்தினி மற்றும் ஆண்கள் பிரிவில் வெற்றி பெற்ற சிவன்ராஜ் ஆகியோருக்கு எதிர்கால பயிற்சி நடவடிக்கைகளுக்கான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார், மலையக விளையாட்டு வீர வீராங்கனைகளை ஊக்குவிக்க தான் எப்போதும் தயாராக இருப்பதாகவும் மலையக மண்ணுக்கு பெருமை சேர்க்க எல்லா துறைகளிலும் நமது பிள்ளைகள் சிறப்பாக செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com