செய்திகள்நுவரெலியாமலையகம்

மல்லியப்பு சந்தியில் செந்தில் தொண்டமான், அதாவுல்லா ஆகியோருக்கு எதிராக போராட்டம்!

மலையகத் தமிழர்களை கொச்சைப்படுத்தும் வகையில் இழி சொற்களைப் பயன்படுத்திய முன்னாள் அமைச்சர் அதாவுல்லா, செந்தில் தொண்டமான் ஆகியோர் பகிரங்கமாக மன்னிப்புகோர வேண்டும் என வலியுறுத்தி ஹட்டனில் இன்று (01) அறவழியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மல்லியப்பு சந்தியில் சந்தியில் நடைபெற்ற இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை ‘பிடிதளராதே’ எனும் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

” மலையக சமூகம் முன்னேறிவருகின்றது. கல்வித்துறையில் பலரும் வெற்றிநடை போடுகின்றனர்.

இந்நிலையில் படிப்பறிவற்றவர்கள் என விளித்து ஒட்டுமொத்த சமூகத்தையும் கொச்சைப்படுத்தும் வகையில் சில அரசியல் வாதிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக அதாவுல்லா, செந்தில் தொண்டமான் ஆகியோர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று – பகிரங்கமாக கருத்து வெளியிட்டு எம் சமூகத்தை கொச்சைப்படுத்தியுள்ளனர். இவர்கள் இருவரும் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும். அதற்கான அழுத்தத்தை விடுப்பதே போராட்டத்தின் நோக்கம்.” என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

நன்றி : Kuruvi

Related Articles

Back to top button