மழையினால் பாதிக்கப்பட்ட தோட்ட மக்களுக்கு உடனடி உதவி- கொட்டகலை பிரதேச சபைத் தலைவர்

தற்போது பெய்துவரும் கடுமையான மழை காரணமாக கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட ஸ்டொனிகிளிப் தோட்டத்தை சேர்ந்த சுமார் 08 குடும்பங்கள் முற்றிலும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவிகளை வழங்குவதற்கு கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாந்த் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் பணிப்புரையின் பேரில் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சென்று பார்வையிட்துடன் அவர்களுக்கு உடனடியாக தேவைப்படும் பொருட்களை சிலவற்றையும் வழங்கிவைத்ததாக கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாந்த் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக தேவைப்பட்ட உலர் உணவு பொருட்கள்,தலையணை,போர்வை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளை அறிந்து , மேலதிக உதவிகளையும் செய்யவுள்ளதாக கொட்டகலை பிரதேச சபை தலைவர் இதன் போது ராஜமணி பிரசாந்த் மேலும் குறிப்பிட்டார்.
/>