காலநிலைசெய்திகள்

மழையுடனான வானிலை அதிகரிக்கும்.!

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் (மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில்) மழை நிலைமையும் நாடு முழுவதும் மற்றும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்று நிலைமையும் அடுத்த சில நாட்களில் (குறிப்பாக 09ஆம், 10ஆம் திகதிகளில்) அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, வடமேல், தென் மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப்பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும், மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களில் இருந்து பாதுகாப்பு பெற தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related Articles

Back to top button