மலையகம்

மவுசாகலை நீர்த்தேக்க பகுதியில் செயற்கை மழை….

மவுசாகலை நீர்த்தேக்க பகுதியில் செயற்கை மழையை பெய்யச் செய்யும் நடவடிக்கை இலங்கை மின்சார சபையினால் நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை விமானப்படையினரின் ஒத்துழைப்புடன் விமானமொன்றின் மூலம் குறித்த நீர்த்தேக்க பகுதிக்கு மேலே 8000 அடி உயரத்தில் முகில் கூட்டங்களுக்கிடையே இரசாயன பதார்த்தங்களை விசீ மழையை பெய்யச் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தாய்லாந்திலிருந்து வருகை தந்துள்ள விசேட பொறியியலாளர்கள் குழுவொன்றின் உதவியுடனேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் 1980ஆம் ஆண்டில் இது போன்ற நடவடிக்கையொன்று வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டதாக மின்சார சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button