Breaking Newsஅரசியல்மலையகம்

மஸ்கெலியாக்கு கிடைக்கபெற்ற வெற்றி  மலையத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்

மஸ்கெலியா பெருந்தோட்ட யாக்கத்திற்கு எதிராக மேற்கொண்டு வந்த தொழிற்சங்க போராட்டத்தை (23) இன்றுடன் நிறைவு செய்கின்றது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜீவன் தொண்டமான் விடுத்துள்ள அறிக்கையில் இது ஒரு முழுமையான வெற்றியாக பார்க்கின்றோம் எனவும், மஸ்கெலியா பெருந்தோட்ட யாக்கம் இ.தொ.கா தொழிலாளர்கள் சார்பில் முன் வைத்த அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.
 அதேநேரத்தில் மக்களுக்கு கிடைக்கவேன்டிய சம்பள நிலுவை தொகை அந்த அந்த தோட்ட நிறுவாகத்தினூடாக தொழிலாளர்களுக்கு கிடைக்கும் என தெரிவித்த ஜீவன் தொண்டமான்
மேலும் இது இ.தொ.காவின் பேரம் பேசும் சக்திக்கு கிடைத்துள்ள மாபெரும் வெற்றியாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் இந்த  வெற்றிக்கு உறுதுணையாக இருந்த  மக்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.என ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
அத்தோடு இந்த விடயத்தில் மாற்று தொழிற்சங்க தலைவர்கள்,தலைவிகள் எல்லோரும் ஒத்துழைத்து எமக்கு மக்கள் பலத்தை காட்டியிருகின்றனர்.
அதே சமயத்தில் அரசியல் ரீதியாக எந்த கட்சியும் பிரிந்து இருந்தாலும்  நமது சமூகத்திற்காக ஏற்படும் பிரச்சினைகளுக்கு  அரசியல் ரீதியாக எல்லோரும் பொதுவாக ஒத்துழைத்தால் மாத்திரமே எம் பலம் என்னவென்று கம்பனிகளுக்கு காட்ட முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார் .
இன்றைக்கு மஸ்கெலியாக்கு கிடைக்கபெற்ற வெற்றி  மலையத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும் .மஸ்கெலியா பெருந்தோட்டடத்திற்கு நடந்த விடயம் நாளைக்கு எந்தவொரு பெருந் தோட்டத்திற்கும் நடக்கலாம் ஆகவே ஒன்றினைந்து செயற்படுவோம் எனவும் வழியுறுத்தியுள்ளார்.
Attachments area

Related Articles

Back to top button