மஸ்கெலியாவில் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு.?

மஸ்கெலியா பிரதேசத்தில் கடந்த 19ஆம் திகதியன்று காணமல் போனதாக குறிப்பிடப்பட்ட இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.
மஸ்கெலியாவை சேர்ந்த 30 வயதுடைய பெதும் மதுசங்க லியனகே என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பாக கடந்த 19ஆம் திகதி இரவு பெதும் மதுசங்க லியனகேவின் கையடக்க தொலைபேசிக்கு அழைப்பு ஒன்று வந்ததை அடுத்து அவர் வீட்டில் இருந்து வெளியேரியவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என அவரது தந்தை வாக்கு மூலம் வழங்கியுள்ளார்.
தொடர்ந்து மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் பெதும் மதுசங்க லியனகேவின் பாதணிகள் மவுசாக்கலை நீர்த்தேக்கத்தின் அருகாமையில் கண்டெடுக்கப்பட்டதை அவர் நீர்த்தேக்கத்தில் விழுந்திருக்கலாம் என சந்தேகத்தில் 20ஆம் திகதியன்று மஸ்கெலியா பொலிஸார் மவுசாக்கலை நீர்த்தேக்கத்தில் மேற்கொண்ட தேடுதல் பணியில் சடலம் இருப்பதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லாததன் காரணமாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்கவினால் கொழும்பில் இருந்து சுழியோடிகள் வரவழைக்கப்பட்டு இன்று காலை 6மணி முதல் தேடுதல் பணி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் 8 மணியளவில் சடலம் கிடைத்ததாகவும் மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும்,
அட்டன் நீதிமன்ற நீதிபதி சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டபின் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லவுள்ளதாவும் தெரிவிகிக்கப்படுகின்றது.