மலையகம்

கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண்ணுக்கு நடந்த விபரீதம்

மஸ்கெலியா – காட்மோர் தோட்டத்தில் பெண் ஒருவர் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பம் இன்று காலை இடம்பெற்றுள்ளதுடன், தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்த போது இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

கால் தவறி விழுந்ததன் காரணமாக இந்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்த பெண் 56 வயதுடைய பெண் மூன்று பிள்ளைகளின் தாய் என குறிப்பிடப்படுகின்றது.

மேலும், சடலம் தொடர்பான நீதவான் விசாரணைகள் இடம்பெறவுள்ள நிலையில் , மஸ்கெலியா பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com