செய்திகள்நுவரெலியாமலையகம்

மஸ்கெலியாவில் 24 வயது மனைவியை கொலை செய்த கணவன் கைது

மஸ்கெலியா – கங்கேவத்த பகுதியில் ஒரு பிள்ளையின் தாயான 24 வயதான இளம் தாயொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான முறையில் குறித்த தாய் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, இளம் தாயின் சடலம் நேற்று (20) மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது முன்னெடுக்கப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில், குறித்த இளம் தாய் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ள நிலையில், குடும்பத் தகராறு காரணமாக இளம் தாய் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதையடுத்து நீதவான் விசாரணைகளின் பின்னர், சடலம் டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்நிலைியில் குறித்த சம்பவம் தொடர்பில், உயிரிழந்த யுவதியின் 23 வயது கணவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button