செய்திகள்மலையகம்

மஸ்கெலியா ஓல்டன் தோட்ட சம்பவம் தொடர்பிலான தோட்ட தொழிலாள ர்களுக்குப் பிணை..

மஸ்கெலியா ஓல்டன் தோட்டத்தில் தோட்ட முகாமையாளரை தோட்ட தொழிலாளர் தாக்கிய சம்பவம் தொடர்பிலான சந்தேக நபர்களுக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.

ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டப் போதே சந்தேக நபர்கள் அனைவருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி ஹெரேஷன் குமார் எமது இணையதளத்துக்கு தெரிவித்தார்.

குறிப்பாக ஓல்டன் தோட்ட மக்கள் தொடர்பில் மலையகத்தை சார்ந்த சட்டத்தரணிகளான நேரு கருணாகரன் மற்றும் சிரில் ராஜ் அவர்களோடு இணைந்து செயல்பட்ட அத்தனை சட்டத்தரணிகளுக்கும் சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளை பலர் தெரிவித்து வருகின்றமை குறிப்படத்தக்கது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com