மலையகம்

மஸ்கெலியாயாவில் காணாமல் போன அண்ணன் தங்கை இருவரின் சடலங்கள் மீட்பு.

 

மஸ்கெலியா கவரவில தோட்டத்தில் கானாமல் போனதாக குறிப்பிட்ட இரண்டு பேரின் சடலங்கள் இன்று 28.11.2017.மீட்கபட்டதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

மஸ்கெலியா பாக்ரோ தோட்டத்ததைச் சேர்ந்த இருவரும் கொழும்பு பகுதியில் தொழில் புரிந்து வருவதாகவூம் பாக்ரோ தோட்டத்தில் இடம் பெற்ற சடங்கு வைபவத்திற்கு கொழும்பில் இருந்து வருகை தந்த நிலையில் கடந்த 26ம் திகதி முதல் இவர்கள் கானாமல் போயூள்ளதாக மஸ்கொலியா பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்பட்டிருந்தது. இந் நிலையில் 27.11.2017 திங்கள் கிழமை மாலை ஆட்டுக்கு கொலை வெட்ட சென்றவர் ; ஒருவரினால் சந்தேகத்துக்கு இடமான முறையில் பாதனி இரண்டை கவரவிலஒயாவிற்கு அருகாமையில் இனங்கண்டத்தோடு மஸ்கெலியா பொலிஸாருக்கு அறிவிக்கபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதே நேரம் குறித்த சடலங்களை மீட்பதற்கு கொழும்பில் இருந்து கடற்படையினர் ; வரவலைக்கப்பட்டு சடலங்கள் மீட்கபட்டதாக தெரிவிக்கபடுகிறது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்கள் பரமேஸ்வரன் மகாலெட்சுமி வயது18 மற்றும் சுப்ரமணியம் மகேந்திரன் வயது 28 என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் நீதவான் மரண விசாரனைக்காக குறித்த இடத்திலேயே சடலம் வைக்கபட்டுள்ளதோடு நீதவானின் மரணவிசாரனையின் பின் இரண்டு சடலங்களும் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரி சோதனைக்காக நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கபட உள்ளதாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button