செய்திகள்

மஸ்கெலியா-கொரோனா தொற்றாளர்களுக்கான தீவிர கண்காணிப்பு பிரிவு இன்று திறந்து வைக்கப்பட்டது.

மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள, கொரோனா தொற்றாளர்களுக்கான தீவிர கண்காணிப்பு பிரிவு இன்று திறந்து வைக்கப்பட்டது.
ஹட்டன், கொட்டகலை ரொட்டரக்ட் கழகம் மற்றும் அல்முனை மொரட்டுவ பல்கலைகழக ரொட்டரக்ட் கழகம் அனுசரணையில் இந்த கண்கானிப்பு பிரிவு புனர்நிர்மானம் செய்யப்பட்டுள்ளது. குறித்த கண்காணிப்பு பிரிவினை மஸ்கெலியா வைத்தியசாலை பொறுப்பதிகாரிதிகாரி எம்,ஆர்.என் பாஹிமா தலைமையில் இன்று (10) திகதி திறந்து வைக்கப்பட்டது.
வைத்தியசாலையின் பொறுப்பதிகாரிஅதிகாரி எம்.ஆர்.எம் பாஹிமா தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில், ரொட்டெக்ட் கழகத்தின் தலைவர் தியாகராஜா யுவராஜன் முன்னாள் தலைவி அர்ச்சனி பஞ்சாட்சரம், இணைப்புச் செயலாளர் சங்கரலிங்கம் ரூபதர்சன் டிக்கோயா வைத்தியசாலையின் வைத்தியர் அருள்குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Yuwan 

Related Articles

Back to top button


Thubinail image
Screen