செய்திகள்

மஸ்கெலியா-சாமிமலை பிரதான வீதியில் வாகன விபத்து; ஒருவர் உயிரிழப்பு.

மஸ்கெலியா-சாமிமலை பிரவ்ன்ஸ்விக் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் வாகன விபத்தில்
காட்மோர் கல்கந்தை பிரதேசத்தை சேர்ந்த 26வயதுடைய நபரொருவர்
உயிரிழந்துள்ளார்.குறித்த நபர் தனியார் பேருந்தொன்றிற்கு இடம் கொடுக்க
முற்படுகையில் நிலைதடுமாறி விபத்து ஏற்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலிய பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button