செய்திகள்

மஸ்கெலியா சென்.ஜோசப் கல்லூரியில் ஐந்து மாணவர்கள் சகல பாடங்களிலும் அதியுயர் சித்தி

கடந்த வருடம் (2020) நடந்து முடிந்த க.பொ.த சாதாரண தரபரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டம் மூன்றில் அமைந்துள்ள மஸ்கெலியா சென்.ஜோசப் கல்லூரியில் ஐந்து (5) மாணவர்கள் சகல பாடங்களிலும் அதியுயர் சித்தியினை (9 A ) பெற்றுள்ளார்கள்.  இவர்களுடன் சேர்ந்து பல மாணவர்கள் தற்போதைய Covid 19 சூழ்நிலையிலும் சிறந்த பெறுபேறுகளை பெற்று பெற்றோருக்கும் , பாடசாலை மற்றும் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர். கடந்த ஆண்டை விட சிறந்த வளர்ச்சிபோக்கில் பாடசாலைக்கு  சித்திகள் கிடைத்துள்ளன, பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் சென்.ஜோசப் கல்லூரி பழைய மாணவர் சங்கம்  (Past Pupils Association of St.Joseph's College)  அவர்களின் எதிர்காலம் சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
   இந்த மாணவர்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்கள் , வகுப்பாசிரியர்கள் 
,அயராது உழைத்த அதிபர்,  வழி நடாத்திய கோட்டம் மூன்று பணிப்பாளர் மற்றும் வலய கல்வி பணிப்பாளர் ஆகியோரின் சேவைகளை மஸ்கெலியா சென்.ஜோசப் கல்லூரி பழைய மாணவர் சங்கம்  (Past Pupils Association of St.Joseph's College) வெகுவாக பாராட்டுகின்றது. மேலும் இவர்களின் கல்வி வளர்ச்சியில் சிரமம்பாராது உழைத்த பெற்றோர் மற்றும் பங்கு கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறது. 

Related Articles

Back to top button


Thubinail image
Screen