மலையகம்

மஸ்கெலியா தமிழ் மகா வித்தியாலயத்தின் புதிய கட்டடம் திறந்து வைப்பு

ஹட்டன் – மஸ்கெலியா தமிழ் மகா வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட இரண்டு மாடி கட்டட தொகுதி திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு நேற்று பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்றுள்ளது.

மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சின் 94 இலட்சம் ரூபா செலவில் இந்த பாடசாலைக்கு புதிய வகுப்பறைக்கான கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

மேலும், நிகழ்வில் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் எம்.ரமேஷ்வரன், மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் செண்பகவள்ளி, ஹட்டன் வலய மேலதிக கல்வி பணிப்பாளர், அதிகாரிகள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பல பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button