ஆன்மீகம்நுவரெலியாமலையகம்

மஸ்கெலியா பிரவுன்லோ ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் சர்வ மத வழிபாடு…


உலகில் நிலவி வரும் கொரோணா தொற்று நோயிலிருந்து மக்கள் விடுபட சிறப்பு சர்வ மத வழிபாடு பூஜை நிகழ்வு இன்று (06/12) மஸ்கெலியா பிரவுன்லோ ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பரிபாலன சபை தோட்ட பொது மக்கள் இணைந்து சர்வ மத வழிபாட்டினை ஏற்பாடு செய்திருந்தினர்.

இந்த பூஜை நிகழ்வை பிரவுன்லோ ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பிரதம குரு ஆனந்தகுமார் அவர்களின் தலமை ஏற்று நடத்தினார். இந்த சர்வ மத வழிபாட்டு நிகழ்வில் மஸ்கெலிய சுவர்ணாய விகாரை வணக்கத்திற்குரிய தபோவாய சுசீத தேரர் அவர்களும் மஸ்கெலிய பள்ளிவாசல் மௌலவி பைசூர் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

பிரதான யாக பூஜையை கொட்டகலை ஸ்ரீ முத்துவிநாயகர் ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ ஸ்கந்தராஜா அவர்கள் நடாத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button